டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊழியர்கள், பயோமெட்ரிக் வருகை பதிவேடு களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் , அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வீடுகளுக்கு செல்லலாம் என்று வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசு, அரசு ஊழியர்கள்  வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு உளளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்துள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை இதனை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.

இதைத் தவிர தமிழகம், ஆந்திரா, ஒடிசா, உத்தரகாண்ட், பஞ்சாப், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர்களைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பணியாளர்கள் நல மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ”அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடல் வெப்பநிலையை அளவிடும் தெர்மல் ஸ்கேனர்களைப் பொருத்த வேண்டும். அனைத்துத் துறை அமைச்சகங்களின் அலுவலகங்களிலும் இவற்றைப் பொருத்த வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்து உள்ளது.

எனினும்  கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் நிறுவனங்கள் பல ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றலாம் என அறிவுறுத்தியுள்ளன. இதன்படி ஐடி உட்பட வெவ்வேறு தனியார் துறை ஊழியர்கள் பலர் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் உத்தரகாண்ட் அரசு,  அத்தியாவசியமாக தேவைப்படுபவர்களை தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றலாம் என அறிவித்துள்ளது. இந்த உத்தரவு மார்ச் 19-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுகாதாரம், காவல்துறை, போக்குவரத்து, குடிநீர் விநியோகம், மின்சாரம், துப்புரவு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் அவர்கள் கட்டாயம் பணிக்கு வரவேண்டும் எனவும் உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.