கொரோனா அச்சுறுத்தல்: சமூக விலகலுடன் மணமக்களை வாழ்த்தும் உறவினர்கள்- வீடியோ

கொரோனா:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக விலகல் கடைபிடிக்க மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பணக்காரர் வீட்டு திருமணம் ஒன்று, சமூக விலகளுடன், நடைபெற்றது. மணமக்களை ஏராளமானோர் தூரத்தில் இருந்தே   ஆடிப்பாடி வாழ்த்துகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதில் சமூக விலகல் முக்கிய பங்காற்றுகிறது. இருந்தாலும் பல திருமணங்கள் திட்டமிட்டப்படி அரசின் அனுமதி பெற்று முக்கிய நபர்கள் மட்டும் சமூக விலகலுடன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

திருமணத்தின்போது  மம்பதிகள் முகமூடிகளுடன் காணப்படுவதும், திருமண விழாவில் கலந்துகொண்ணட மற்றவர்களும் மாஸ்க் அணிந்து, சமுக விலகலுடன் வாழ்த்துவதும் தொடர்ந்து வருகிறது.

அதுபோன்ற ஒரு திருமணம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. எஸ்டேட் ஒன்றில் நடைபெற்றுள்ள இந்த திருமண தம்பதியினரை வாழ்த்த வந்துள்ளவர்கள், தங்களது கார்கள் அருகிலேயே இருந்து சமுக விலகல் கடைபிடித்து வாழ்த்தி வருகின்றனர்..

கார்ட்டூன் கேலரி