சென்னை:

மிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நிலையில் பலர் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய குற்றவியல் சட்ட விதி 188ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை, ஈரோடு, இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் அனைத்து செயல்பாடுகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவசர தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து,, சென்னை, காஞ்சீபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க தமிழகஅரசு  உத்தரவு பிறப்பித்து உள்ளது.  தவிர ஆந்திராவில் மூன்று மாவட்டங்களையும், டெல்லியில் 7 மாவட்டங்களையும், குஜராத்தில் ஆறு மாவட்டங்களையும், ஹரியானாவில் 5 மாவட்டங்களையும், கர்நாடகாவில் 5 மாவட்டங்களையும், கேரளாவில் 10 மாவட்டங்கள் என நாடு முழுவதும் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அரசின் அறிவிப்பை மீறி செயல்படுபவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள், அரசின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டாலோ, அவர்கள்மீது இந்திய குற்றவியல் சட்ட விதி 188ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.