சென்னை

மிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுப் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 67 ஆகி உள்ளது.    இதில் 10 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆகும்.  இவர்கள் டில்லியிலிருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக 1.5 கோடி முகக் கவசம் வாங்க ஆர்டர் செய்துள்ளது.  அத்துடன் என் 95 ரக முக கவசங்கள் 25 லட்சம் வாங்கவும் 11 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் வாங்கவும் ஆர்டர் அளித்துள்ளது.

இதைத் தவிர கொரோனா சோதனைக்காக 30000 சோதனைக் கருவிகள் (Test kits) வாங்க தமிழக அரசு ஆர்டர் அளித்துள்ளது.  கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 2500 புதிய வெண்டிலேட்டர்கள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளது

கொரோனா பரவுதல் தடுப்புக்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.   இவ்வாறு அமைக்கப்பட்ட 11 குழுக்களும் தனித்தனியே பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பணி என வரையறை செய்யப்பட்டுள்ளது.