கொரோனா : ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசி, பருப்பு, சர்க்கரை இலவசம்

சென்னை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு அடைந்தோருக்கு தமிழக அரசு பல நிவாரண உதவிகளை அளிக்க  உள்ளது.

இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.   அதன் காரணமாகப் பலரால் பணிக்குச் செல்ல முடியாத நிலை உண்டாகி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  அவர்களுக்கான பல நிவாரண உதவிகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அவை பின் வருமாறு

அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படும்

144 தடை உத்தரவு காரணமாகப் பல உணவு விடுதிகள் இயங்காதது என்பதால் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டு அங்கு உணவு வழங்கப்படும்.

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி புரிவோருக்கு 2 நாள் கூடுதல் ஊதியம்

ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இந்த மாதமே வாங்கிக் கொள்ளலாம்.

இந்த மாதம் வாங்க இயலாதவர்களுக்கு அடுத்த மாதம் இரு மாதப் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்.

கூட்டத்தை குறைக்க அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அந்த குறிப்பிட்ட வேளையில் மட்டும் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும்.

You may have missed