புதுச்சேரி:
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வராக 4 ஆவது முறையாக என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்ன தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.