தமிழகத்தில் இன்று புதிதாக 5,584 பேர் பாதிப்பு, 78 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  இன்று புதியதாக 5584 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது.

அதிக பட்சமாக சென்னையில் 993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில்   6,516 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் சிகிச்சை பலனின்றி 78 பேர் உயிரிழந்துளளனர்.