கொரோனா : சென்னையில் இன்று 618 பேருக்குப் பாதிப்பு

சென்னை

சென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னையில் மட்டும் 618 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் மொத்தம் 13,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 9 பேர் உயிர் இழந்து இதுவரை கொரொனாவால் 154 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 113 பேர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 4,66,550 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று மாநிலமெங்கும் 765 பேர் குணமடைந்து இதுவரை மொத்தம் 11,313 பேர் முழு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இதுவரை 8895 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி