கொரோனா : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669 பேருக்குப் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 7204

சென்னை

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 669 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7204 ஆகியுள்ளது.

கொரோனா தாக்குதல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 669 ஆகி உள்ளது.

இதில் 412 பேர் ஆண்கள், 257 பேர் பெண்கள்  ஆவார்கள்

இதுவரை 7204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 4907 ஆண்கள், 2295 பெண்கள் மற்றும் 2 மாற்றுப்பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 13367 பேருக்கு கொரோனா   பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 2,32,368 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று மூவர் மரணம் அடைந்து மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 47 ஆகி உள்ளது.