தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி…

--

சென்னை:

மிழகத்தில் ஊரங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்புகளும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த நிலையில், அங்கு கடை நடத்தியவர்கள், தொழிலாளிகள், பொருட்கள் வாங்க சென்றவர்கள் என ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.

நேற்று ஒரே   நாளில் 771 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகப்பட்சமாக சென்னையில் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருந்தது.

இன்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  56 வயது பெண் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் இன்று உயிரிழந்தார்.

இன்று 2 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.