டெல்லி:

யில்வே மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளில்,  மத்தியஅரசு ஊழியர்களும் கொரோனா சிகிச்சை பெறலாம் என்று இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பேயாட்டம் ஆடி வருகிறது. இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும்  25 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட49 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 4 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் உள்ள உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய ரயில்வே தனது ரயில்களின் பெட்டிகளை மருத்துவ மனையாக மாற்றி வருகிறது. இந்த மருத்துவமனைகளில் ரயில்வே பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, மத்தியஅரசு ஊழியர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அவர்களின் அடையாள அட்டையை காண்பித்து சிகிச்சை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரயில்வே மருத்துவமனைகிள்ல 128 மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.  மேலும்,  586 மருந்தகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்க  அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.