வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,262 உயர்ந்து 15,13,243 ஆகி இதுவரை 88,403 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  82,262 பேர் அதிகரித்து மொத்தம்15,13,243 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6367 அதிகரித்து மொத்தம் 88,403 பேர் உயிர் இழந்துள்ளனர்.  3,29,731 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.  48,078 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றைய பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிர் இழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  29,875 பேர் அதிகரித்து மொத்தம் 4,30,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1895 அதிகரித்து மொத்தம் 29,875பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 22,336  பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 9266 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்பெயினில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  6278 பேர் அதிகரித்து மொத்தம் 1,48,220 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 747 அதிகரித்து மொத்தம் 6278 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 48,021 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 7069  பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  542 பேர் அதிகரித்து மொத்தம் 1,39,422 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 542 அதிகரித்து மொத்தம் 17669 பேர் உயிர் இழந்துள்ளனர். இது மரணம் அடைந்தோர் எண்ணிக்கையில் இரண்டாவதாகும்.  இதுவரை 26,491 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3683 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரிட்டனில் நேற்று 938 பேர் உயிரிழந்து மொத்த எண்ணிக்கை 7,097 ஆகி உள்ளது.  இங்கு நேற்று 5491 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 60,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  565 பேர் அதிகரித்து மொத்தம் 5916 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 18 அதிகரித்து மொத்தம் 178 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 506 பேர் குணம் அடைந்துள்ளனர்.