டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 4470. மற்றும் கர்நாடகாவில் 1238 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 4,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,54,042 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இன்று 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 2534 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,217 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,72,911 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,938 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 8,97,801 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,912 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5076 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 8,66,664 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,206 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.