விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது கொரோனா தடுப்பு மருந்து….

சென்னை:  தமிழகத்திற்கு மகாராஷ்டிராவில் இருந்து கோ ஏர் விமானம்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து, இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
நாடு முழுவதும் வரும் 16ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக  புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தடுப்பூசிகள் அனுப்பும் பணி இன்றுமுதல் தொடங்கி உள்ளது.
அதன்படி, தமிழகத்திற்கு முதல்கட்டமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5.56 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து,   புனேவில் இருந்து  கோ ஏர் விமானத்தில் சென்னை வந்தடைந்தது.  அதையடுத்து தடுப்பூசிகளை இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை அனைத்தும் சென்னை பெரியமேட்டில் உள்ள குளிர்பதன கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர், பலத்த பாதுகாப்புடன்  மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என கூறப்படுகிறது.