2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசை தடுக்க உலக நாடுகள் மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு  கின்றன. பல்வேறு வகையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும், மனிதர் களுக்கு செலுத்தி சோதனை நடைபெறுவதாகவும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் ஆகஸ்டு 15ந்தேதி கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல்கள் வெளியானது. அதுபோல ரஷ்யா உள்பட சில நாடுகள் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி வருகின்றன.
இந்தநிலையில்,  கொரோனா தடுப்பு மருந்து குறித்து  உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனர், மைக் ரயான் அவர்கள் கூறியவது,
கொரோனா தடுப்பு மருந்தை 2021-ம் ஆண்டுக்கு முன் எதிர்பார்க்க முடியாது.  பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து சோதனை முழுவீச்சில் நடைபெறுவகிறது. தற்போது, பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பு மருந்துகள் 3-ம் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், முழுமையான சோதனைக்கு பிறகே அவை விநியோகத்திற்கு வரும் . அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
நாட்டின்  பொருளாதாரத்தை சார்ந்து இல்லாமல், தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதிசெய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.