சென்னை: தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளிலும் ஏப்ரல் 1ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை தடுக்கும் விதிமாக தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி,  தமிழகத்தில் உள்ள 1,900 மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே  ஜனவரி 16-ந்தேதி முதல் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள் 5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக முதியவர்களுக்கும், நாள் பட்ட நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 23 லட்சத்துக்கு மேற்பட்டவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கு மத்தியஅரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, . இதற்காக தடுப்பூசி மையங்களை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை செய்து வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்,  தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள 3,217 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதால் தமிழகம் முழுவதும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 1,900 சிறிய மருத்துவமனைகளில் (மினி கிளினிக்) ஏப்ரல் 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.