ண்டன்

கொரோனா பரவுதலுக்கு தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம்  என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது.  அதிகம் பாதிக்கப்பட்ட இடத்தில் நான்காம் இடத்தில் உல்ள் இந்நாட்டில் இதுவரை 2.26 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இதுவரை 32,692 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பாதிக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன  இந்த் தளர்வுகள் குறித்த 50 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று இந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டார்.  அதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், “இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்  மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிய கடும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.  இதற்கு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகலாம்.  அல்லது கண்டுபிடிக்க முடியாமலேயும் போகலாம். நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.