டெல்லி: கொரோனா தடுப்பூசியானது இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் இன்று 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா பின்னர் கூறியதாவது: முன்கள பணியாளர்கள் மற்றும் பிரதான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

பின்னர் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில் தான் வெளி சந்தையில் விற்பனைக்கு வரும். இந்த ஆண்டு இறுதி அல்லது அதற்கு முன்பாக திறந்தவெளி சந்தை விற்பனைக்கு கொரோனா தடுப்பூசி வர வாய்ப்பு உள்ளது.

நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என இதுவரை 87.5 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.