புனே: கொரோனா தடுப்பு மருந்துக்கான 3வது கட்ட மனிதப் பரிசோதனை நடவடிக்கை, புனேவில் உள்ள அரசால் நடத்தப்படும் சசூன் பொது மருத்துவமனையில் செப்டம்பர் 21ம்(இன்று) தேதி தொடங்கியுள்ளது.

இந்த தடுப்பு மருந்து ஸீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் டெவலப் செய்யப்பட்டதாகும்.

“தடுப்பு மருந்தின் 3வது கட்ட மனிதப் பரிசோதனையை நாங்கள் துவக்கியுள்ளோம். மொத்தம் 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு நாங்கள் மருந்து டோஸ் கொடுப்போம்” என்று சசூன் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தின் இரண்டாம் கட்ட மானுடப் பரிசோதனை, புனேயின் பார்தி வித்யாபீட் மருத்துவக் கல்லூரி மற்றும் கேஇஎம் மருத்துவமனையில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.