நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை…

டெல்லி: நாடு முழுவதும் 700 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை  தொடங்கி உள்ளது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து,  தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. டுப்பூசி இயக்கத்தின் மையமாக புனே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பாக குளிரூட்டப்பட்ட அறையிலும் எடுத்துச்செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து முடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2ந்தேதி முதல்கட்ட சோதனை 285 மாவட்டங்களில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று 2வது கட்ட சோதனை  கொரோனா தடுப்பூசியின் (Corona Vaccine) உலர் ரன் நாட்டின் 700 மாவட்டங்களில்  நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்பணி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  முதல்கட்டமாக  300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்துகூறிய  தேசிய கோவிட் பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வினோத் பால்,  கோவிட் தடுப்பூசிக்கான ஒரு குழுவாக அரசாங்கமும், தொழில்துறையும், மற்ற பங்குதாரர்களும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார். முதல் கட்டத்தில், நாட்டின் 300 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.