சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,059-ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில்புதிதாக 5,709 பேருக்கு கொரோனா வைரஸ்  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,654  ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று புதிதாக 1,182  பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,19,059-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டுமே 1097 பேர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ள நிலையில், இதுவரை பேர் கொரோனா வில்  பாதிப்பில்இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,455  ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும், 12,103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,501 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னையில் கடந்த 11 நாட்களாக  1000த்துக்கு கீழ் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் 1000ஐ கடந்து பதிவாகி உள்ளது.

சென்னையில் 6ம் தேதி 1,091 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு 7ம் தேதி முதல் ஆயிரத்துக்கு கீழ் தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் 8 நாட்களுக்கு பிறகு அதாவது 14-ம் தேதி ஆயிரத்துக்கும் மேல் 1,187 பேரும், அதைத்தொடர்ந்து 15-ம் தேதி 1,179 பேருக்கும் 16-ம் தேதி 1,196 பேருக்கும் நேற்றும் 1185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட நிலையில் இன்றும் 1182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.