டெல்லி:

ந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடையும் நிலையில், தலைநகர் டெல்லி தனிப்படைப்படுத்தப்பட்டு உள்ளது.. இதன் காரணமாக, மார்ச் 31ந்தேதி வரை அனைத்து பள்ளிக்கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பொதுநிகழ்ச்சிகள், பொதுஇடங்களில் மக்கள் கூடுவது, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மால்கள்  மற்றும் திருமண மண்டபங்களில் கண்டிப்பாக கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது.  இந்தியாவில் மொத்தம் 73 பேருக்கு கொரோனா பாதிப்பட்டுள்ளது. இவர்களில் இத்தாலியைச் சேர்ந்த சேர்ந்த பயணிகள் 16 பேர் உள்பட,  கேரளா (17), மகாராஷ்டிரா (11), உத்தர பிரதேசம் (10), டெல்லி (6), கர்நாடகா (4), லடாக்(3), ராஜஸ்தான் (1), தெலுங்கானா (1), தமிழ்நாடு (1), ஜம்மு காஷ்மீர் (1) and பஞ்சாப் (1) ஆகியோருக்கு வைரஸ் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் 52 இடங்களில் கொரோனா சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும், அதற்கான ஆய்வகங்களையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழகத்தில், நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை, அரசு மருத்துவ கல்லூரி, தேனி ஆகிய இரு இடங்களிலும் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்து உள்ளது.

இதைத்தொடர்ந்து கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கில் டெல்லி தனிமைப்படுத்தப்பட்டு இருப்பபதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.