Random image

கொரோனா வைரஸ்: நாம் உண்மையிலேயே போருக்கு தயாரா?

நமது அரசுகள் நாம் தயார்படுத்திக் கொள்ள தேவையான நேரம் ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த 18 மாதங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

கட்டுரைச் சுருக்கம்:

மனித சமுதாயத்தின் நலன் கருதி, தீவிரமான கொரோனா வைரஸ் தொற்று மீதான  நடவடிக்கைகளும், அதை தொடர்ந்து நோய்தொற்றின் உச்சபட்ச  தாக்கமும் இன்னும் சிலவாரங்களில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். இது நடைபெறாதபட்சத்தில், பல்லாயிரக் கணக்கானோர் பலியாக நேரிடலாம். ஏனெனில் தற்போதுள்ள சூழ்நிலையில் சுகாதாரக் கட்டமைப்புகள் ஸ்தம்பித்து போகும் வாய்ப்புகளே மிக அதிகம்.

“கொரோனா வைரசினால் எவ்வித பிரச்னையும் இல்லை” என அறிவித்த பெரும்பாலான நாடுகள், நாடு தழுவிய அவசர நிலை பிரகடனப்படுத்த விளைந்துள்ளன. இருந்தும், பல நாடுகளில் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் இதுவரை இல்லை. ஏன்? ஏனெனில், ஒவ்வொரு நாட்டவர்களும் கேட்கும் கேள்வி இதுதான். “நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றை எவ்வாறு எதிர்கொள்வது?” ஆனால் கிடைக்கும் பதில்கள் தான் தெளிவானதாகவும், வெளிப்படையானதாகவும் இல்லை.

பிரான்ஸ், ஸ்பெயின் அல்லது பிலிப்பைன்ஸ் போன்ற சில நாடுகள் தங்களது அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக மூட உத்தரவிட்டுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும்  நெதர்லாந்து போன்ற மற்றவர்கள் “சமூக தனிமைப்படுத்தல்” போன்ற நடவடிக்கைகளோடு சற்றே தயக்கம் காட்டுகின்றன. இந்தக் கட்டுரையில் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட வரைபடங்கள், விளக்கப்படங்கள், கணக்கீடுகள், மாதிரிகள் என ஏராளமான தரவுகளுடன் பின்வரும் பகுதிகளை விளக்கமாகக் காணவிருக்கிறோம்:

1.     தற்போதைய நிலைமை என்ன?

2.     நம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைளுக்கான வாய்ப்புகள் என்னென்ன?

3.     தற்போதைய இன்றியமையாத ஒன்றாகக் கருத வேண்டியது எதை:  நேரம்

4.     ஒரு சிறந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் யுக்தி என்பது என்ன?

5.     பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் குறித்து நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்?

இந்தக் கட்டுரையின் இறுதியில் நீங்கள் அறியவுள்ள செய்திகள் பின்வருமாறு:

நமது சுகாதாரக் கட்டமைப்பு ஏற்கனவே தோல்வியடைந்து விட்டது. உலக நாடுகளுக்கு இரண்டு வழிகளே உள்ளன: ஒன்று “கடுமையாக போராடுதல்” அல்லது “கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுதல்”. போராடுவதில் இருந்து பின்வாங்கினால், ஆயிரக்கணக்கானோர், சில நாடுகளில், இலட்சக்கணக்கானோர் இறக்க நேரிடும். மேலும் இதன் இரண்டாம் கட்ட தாக்கங்களை கட்டுப்படுத்தல் என்பதும் கடுமையானதாக இருக்கும். அதுவே, கடுமையாக போராடுதல் என்பதைத் தேர்ந்தெடுத்தால், மரணங்களைத் தடுக்கலாம். நமது சுகாதாரக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தலாம். சிறப்பான முன்னேற்பாடுகளை கற்றுக்கொள்வோம்.

உலகம் ஒருபோதும், எதையும் பற்றி வேகமாக கற்றுக் கொள்ளவில்லை. இந்த வைரஸைப் பற்றி நமக்கு மிகக் குறைவான தகவல்களே தெரியும் என்பதால், நமக்கு வேண்டிய “நேரத்தை வாங்குதல்” என்பதுவும் இப்போது மிகவும் முக்கிய பிரச்சனை ஆகும்.

நாம் போராடுதலைத் தேர்வு செய்தால், போராட்டம் உடனடியாகத் துவங்கி, படிப்படியாகத் தீவிரமடையும். நாம் பல வாரங்கள் முடங்க நேரிடலாம். ஆனால் மாதங்கள் அல்ல. பின்னர், நமக்கான சுதந்திரத்தை திரும்பப் பெறலாம். அல்லது உடனடியாக இயல்பு நிலைக்கு வராமலும் போகலாம். எப்படியாயினும், நாம் இறுதியில் இயல்பு நிலைக்கு திரும்புவோம். மீதமுள்ள பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு நாம் அனைத்தையும் சரிசெய்ய முடியும். சரி! வாருங்கள் நாம் அனைத்தும் எதிர்கொள்வோம்!

1. தற்போதைய நிலைமை என்ன?

கடந்த வாரம், நாம் பின்வரும் விளைவுகளை வரைப்படமாகக் கண்டோம்:

இந்த வரைபடம் உலக நாடுகளில், (சீனாவைத் தவிர)  உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அளவைக் காட்டுகிறது. குறிப்பாக, இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாடுகளின் நிலையை மட்டுமே நாம் அறிய முடிந்தது. இந்த எண்ணிக்கையில், தற்போது வளர்ந்து வரும் நாடுகளின் நிலையைக் காண, வரைபடத்தின் கீழ் வலது மூலையை  பெரிதாக்கிக் காட்ட வேண்டியிருந்தது. ஆனால், தற்போது குறிப்பிடத்தகுந்த விஷயமாகக் கூறவேண்டியது என்னவெனில், மற்ற நாடுகளும் இந்த மூன்று நாடுகளின் வரிசையில் இணையவுள்ளனர் என்பதே ஆகும். அதன் பின்னர் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

மேற்கண்ட வரைபடத்தில் கணித்தபடி, பல்வேறு நாடுகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. இங்கே, 1,000 க்கும் மேற்பட்ட, பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட நாடுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

·        ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இத்தாலியை விட அதிகமான நோயாளிகள் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

·       முழுமையாக மூடப்படும் அறிவிப்பை வெளியிட்டுள்ள 16 நாடுகளில், சீனாவின் ஹூபேயை விட கூடுதலாக நோயாளிகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான், மலேசியா, கனடா, போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, செசியா, பிரேசில் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் ஹூபேயை விட அதிகமான, ஆனால் 1,000 க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளன. சுவிட்சர்லாந்து, சுவீடன், நார்வே, ஆஸ்திரியா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் 1,000 க்கும் மேற்பட்ட எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இந்த நாடுகளின் பட்டியலைப் பற்றி வித்தியாசமான ஒன்றை நீங்கள் கவனித்தீர்களா? பெரிய, கட்டுப்படுத்த இயலாத பெரும் எண்ணிக்கையில் பரவலைக் கொண்ட சீனா, ஈரான் தவிர, இந்தப்பட்டியலில் உள்ள பிரேசில், மலேசியா என ஒவ்வொரு நாடும் உலகின் வளர்ந்த, பணக்கார நாடுகள் ஆகும்.

இந்த வைரஸ் பணக்கார நாடுகளை குறிவைக்கிறது என்று நினைக்கிறீர்களா? அல்லது பணக்கார நாடுகள் இந்த வைரஸை அல்லது பரவலை விரைவாக கண்டறிகிறது எனகே கருதுவதா? ஆனால், ஏழ்மையான நாடுகளைத் இந்த வைரஸ் தாக்கவில்லை என்பது உண்மையில்லை. மேலும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை வைரஸைத் தடுக்கும் என்பதும் உண்மையிலை. ஆனால் இந்த பருவநிலை காரணி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உதவும் ஒரு சாதகமான சூழ்நிலை என்பது உண்மை என்றாலும் தீவிரமான பரவலைத் தடுக்காது – இல்லையெனில் சிங்கப்பூர், மலேசியா, பிரேசில் ஆகியவை இன்றைய தீவிர நோய் பரவலுக்கு உள்ளாகியிருக்காது.

மேற்குறிப்பிட்ட நாடுகள் ஒன்றுக்கொன்று அதிகத் தொடர்பில் இல்லாதக் காரணத்தால், வைரஸ் இந்த நாடுகளை அடைவதற்கு அதிக காலம் எடுக்கும் அல்லது வைரஸ் தொற்று ஏற்கனவே பரவி இருந்தாலும் இந்த  நாடுகளால் வைரஸை கண்டறியும் பரிசோதனைகளை செயல்படுத்த போதுமான வசதிகள் கொண்டிருக்கவில்லை. ஒருவேளை இந்தக் காரணம் உண்மையாக இருக்குமானால், பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்காது என்று அர்த்தமாகும். அதிதீவிர வைரஸ் பரவலுக்கு உள்ளாகும் முன் இந்த நாடுகள் சிறந்த கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனாவிற்கு எதிராக வெவ்வேறு நாடுகள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்?

2. நமக்கு உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

கடந்த வார நிலைமைக்கு பின், பல நாடுகள் பல்வேறு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக,

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் நடவடிக்கைகள்:

அதிதீவிரத்தின் ஒரு முனையில் ஸ்பெயினும் பிரான்சும் உள்ளன. கால வரிசையின்படி, ஸ்பெயின் மேற்கொண்ட நடவடிக்கைகள்:

3 மார்ச், 2020: ஸ்பெயினின் சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட்டுள்ளனர் எனக் கூறி அவர்களது  பரிந்துரைகளை ஜனாதிபதி நிராகரித்து, 4, மார்ச், 2020 அன்று அவசரகால நிலையை அறிவித்தனர்.

5, மார்ச் 2020: அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டது. அதன்படி,

·       காரணங்கள்: முக்கிய காரணங்களைத் தவிர்த்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. உதாரணம்: மளிகை சாமான்கள், வேலை, மருந்தகம், மருத்துவமனை, வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனம் (சரியான காரணங்களுடன்)

·       குறிப்பாக, குழந்தைகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வது அல்லது நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைப் பார்ப்பது தடை செய்யப்பட்டது (உதவி தேவைப்படும் நபர்களைக் கவனிப்பதை தவிர ஆனால், சரியான சுகாதாரம் மற்றும் சரியான இடைவெளியை பேணும் அறிவுறுத்தலுடன்)

·       அனைத்து மதுபான மற்றும் உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. உணவை வீட்டிற்கு வாங்கி செல்லுதல் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

·       பொழுதுபோக்கு: அனைத்து பொழுதுபோக்கு அரங்கங்களும் மூடப்பட்டுள்ளன. உதாரணமாக, விளையாட்டு, திரைப்படங்கள், அருங்காட்சியகங்கள், நகராட்சி கொண்டாட்டங்கள் முதலியன.

·       திருமணங்களுக்கு விருந்தினர்கள் கூடத் தடை. இறுதிச் சடங்குகளில் ஒரு சிலர் வரை அனுமதிக்கபடுவர்.

·       போக்குவரத்து: பொதுப் போக்குவரத்து இன்னும் செயல்படுகிறது.

7, மார்ச், 2020: நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.

இந்த நடவடிக்கைகளை, ஒரு சிறந்த தடுப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் கைகளை காற்றில் உயர்த்தி, விரக்தியின் அலுத்துக் கொண்டுள்ளனர். இந்த இரண்டிற்குமான இடைவெளியை விளக்குவதே இந்தக் கட்டுரையின் முயற்சி ஆகும்.

பிரான்சின் தடுப்பு நடவடிக்கைகள் ஸ்பெயினின் நடவடிக்கைகளை ஒத்திருந்தாலும், அவர்கள் அதை முழுமையாக செயல்படுத்த சற்றே காலமெடுத்துக் கொண்டுள்ளனர். ஆனால், சிறு வணிகங்களுக்கு வாடகை, வரி நீக்கம் என அதித்தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்தின் நடவடிக்கைகள்:

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போலவே, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டியுள்ளன. அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:

• 11, மார்ச், 2020: பயணத் தடை.

• 13, மார்ச், 2020: தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பேணும் நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை.

• 15, மார்ச், 2020: உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளைத் தவிர்க்கவும், 10 க்கும் மேற்பட்ட நபர்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவதை தவிர்க்கவும் அரசு மக்களை வலியுறுத்தியது. ஆனால் இது ஒரு பரிந்துரையாக மட்டுமே முன்வைக்கப்பட்டது. ஏராளமான மாநிலங்களும் நகரங்களும் முன்முயற்சி எடுத்து மிகவும் கடுமையான நடவடிக்கைகளை கட்டாயமாக்கியது.

இதேபோன்றதொரு நடவடிக்கைகளை இங்கிலாந்தும் மேற்கொண்டது. மிகக் குறைவான ஆணைகளுடன் பரிந்துரைகள் வெளியிடப்பட்டன.

இந்த இரண்டு குழுக்களும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான இரண்டு தீவிர அணுகுமுறைகளை விளக்குகின்றன: தணிக்கை மற்றும் அடக்குதல். அவை என்னவென்று புரிந்துகொள்வோம்.

வாய்ப்பு 1: எதுவும் செய்ய வேண்டாம்

நாம் மற்ற எதையும் புரிந்துக் கொள்ளும் முன், அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் “எதுவும் செய்ய வேண்டாம்” என்ற அம்சத்தினை புரிந்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

இந்த அருமையான தொற்றுநோய் கால்குலேட்டர் வெவ்வேறு சூழ்நிலைகளின் கீழ் என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும். வைரஸின் நடத்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளை நான் வரைபடத்திற்கு கீழே காட்டப்பட்டுள்ளது.  இளஞ்சிவப்பு நிறத்தில், காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் உச்சம் என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் பாதிக்கப்பட்ட  பல்லாயிரக் கணக்கானோரைகே குறிக்கிறது. பெரும்பாலான மாறிகள் இயல்புநிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன. 2.2 முதல் 2.4 வரையிலான ஆர் மாற்றங்கள் மட்டுமே தற்போது உள்ளன (தற்போது கிடைக்கக்கூடிய தகவல்களுக்கு இது மிகவும் ஒத்திருக்கிறது. தொற்றுநோய் கால்குலேட்டரின் அடிப்பகுதியில் காண்க), இறப்பு விகிதம் (சுகாதாரக் கட்டமைப்பு தோல்வியின்  காரணமாக 4%. கீழே விவரங்களைக் காண்க), மருத்துவமனையில் தங்கியிருத்தல் நாட்கள்  (20 முதல் 10 நாட்கள் வரை) மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் (கடுமையான மற்றும் சிக்கலான நிகழ்வுகளின் அடிப்படையில் 20% முதல் 14% வரை. WHO இதை 20% சதவீதமாகக் கூறுகிறது) சமீபத்தில் கிடைத்த ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்த எண்கள் முடிவுகளை அதிகம் மாற்றாது என்பதை நினைவில் கொள்க. முக்கியமான ஒரே மாற்றம் இறப்பு விகிதம் ஆகும்.

ஒன்றும் செய்ய வேண்டாம்: நாம் எதுவும் செய்யாமல் இருந்தால், நோய்த்தொற்று அதிகமாகும். மருத்துவமனை போன்ற சுகாதார நிறுவனங்கள் நிரம்பி வழியும். இறப்பு விகிதம் தீவிரமடையும். தோராயமாக, 10 மில்லியன் மக்கள் இறக்க நேரிடும். (வரைபடத்தின் நீல நிறக் கட்டங்கள்). 75% அமெரிக்கர்கள் கொரோனா தொற்றுக்கு ஆட்படுவதாக் கொண்டால், குறைந்தபட்சம் 4% பேர் இறக்க நேரிடலாம். அது கணக்கீட்டின்படி 10 மில்லியன் இறப்புகள் அல்லது இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அமெரிக்கர்களின் இறப்புகளின் எண்ணிக்கையை விட 25 மடங்கு அதிகம் ஆகும். நாம் கேள்விப்பட்டதை விட, இது அதிகமாகத் தோன்றுவதாக நீங்கள் ஆச்சரியப்படலாம்.

இதில் நாம் அறிந்துக் கொள்வது என்ன?

இந்த வரைபடத்தில் நாம் காணும் எண்களைக் கண்டு, அனைவரும் குழப்பமடைய நேரிடலாம். ஆனால் இதில் இரண்டு முக்கியமான கணக்கீடுகள் உள்ளன. அவை, எவ்வளவு பங்கு மக்கள் நோய் தொற்றுக்கு உள்ளானால், அதில் எவ்வளவு பங்கு மக்கள் இறக்க நேரிடலாம் என்ற கணக்கீடே ஆகும். வெறும் 25% பேர் மட்டுமே நோய் வாய்ப்பட்டிருந்தால் (அறிகுறிகள் தோன்றாத, ஆனால் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் இந்த கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை) இறப்பு விகிதம் 4% க்கு பதிலாக 0.6% ஆக இருக்கும். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 500,000 பேர் என முடிவடையும்.

நாம் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாவிடில், இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த இரண்டு எண்களுக்கு இடையில் இருக்கக் கூடும். இந்த தீவிரத்தின் இரு முனைகளுக்கு (75% மற்றும் 25%)  இடையிலான இடைவெளி பெரும்பாலும் இறப்பு விகிதத்தால் நிரப்பபடலாம். எனவே இதை நன்கு புரிந்துகொள்வது மிக முக்கியம்.

கொரோனா வைரஸ் இறப்புகளுக்கு உண்மையில் என்ன காரணம்? இறப்பு விகிதத்தைப் பற்றி நாம் எவ்வாறு புரிந்துக் கொள்வது?

அடுத்து வருவது, முன்பு இருந்த அதே போன்றதொரு வரைபடம் ஆகும். ஆனால் இதில், பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களுக்கு பதிலாக,   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரைபடத்தின் வெளிர் நீல நிறப்பகுதி என்பது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்களின் எண்ணிக்கை, மற்றும் அடர் நீல நிறம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐ.சி.யூ) செல்ல வேண்டியவர்களைக் குறிக்கிறது. அந்த எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதைக் காணலாம். இப்போது அதை அமெரிக்காவில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுங்கள் (இன்று இது 50,000-மாக உள்ளது. மேற்கொண்டு மீதமுள்ள சில இடங்களை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதன் மூலம், இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கலாம்). இது சிவப்பு புள்ளியிடப்பட்ட வரி ஆகும்.

அந்த சிவப்பு புள்ளியிடப்பட்ட வரி என்பது ஐ.சி.யூ படுக்கைகளின் கொள்ளளவுத் திறனாகும். அந்த வரிக்கு மேலே உள்ள எண்ணிக்கை குறிக்கும் அனைவரும் ஆபத்தான நிலையில் இருந்தும், தேவையான மருத்துவ பராமரிப்பை அணுக முடியாத நிலையில் இருப்பவர்களாவர். எனவே அவர்கள் இறக்க நேரிடலாம்.

ஐ.சி.யூ படுக்கை வசதிகளை எடுத்துக் கொண்டால், பரவலாக இருந்தாலும் அதே போன்றதொரு விளைவையே ஏற்படுத்தும். ஏனெனில், அமெரிக்காவில் 100,000 – க்கும் குறைவான வென்டிலேட்டர்களே உள்ளன.

இதனால்தான் மக்கள் ஹூபேயில் கூட்டம் கூட்டமாக இறந்தனர். தற்போது இத்தாலி மற்றும் ஈரானில் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஹூபேவில், சீன அரசு கட்டிய பிரம்மாண்டமான  மருத்துவமனைகள், அவர்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்து இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியது. இதை இத்தாலியும் ஈரானும் இதைச் செய்ய முடியாது; முடியுமானால் சில நாடுகள் முயற்சிக்கலாம்.

இறப்பு விகிதம் 4% எனக் கணக்கிடப்படுவது ஏன்?

மிக எளிய பதிலே ஆகும். நோய் பாதிக்கப்பட்டவர்களில் வெறும் 5% தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அதை வழங்க முடியாவிட்டால், மக்கள் இறக்க நேரிடும். அவ்வளவே! மேலும், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், அமெரிக்க நோயாளிகளின் நிலை, சீனாவை விட தீவிரமாவும், மோசமானதாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இது இத்துடன் முடிந்துவிடவில்லை.

கூடுதல் மற்றும் இணைச் சேதம்

இந்த வரைப்படத்தின் தரவுகளும், எண்களும் கொரோனா வைரஸால் ஏற்படும் இறப்புகளின் சதவிகிதத்தை மட்டுமே காட்டுகின்றன. கொரோனா வைரஸ் நோயாளிகளால் நமது அனைத்து சுகாதார கட்டமைப்புகளும் ஸ்தம்பித்துவிடுமானால், மற்ற நோயாளிகளின் நிலை என்ன ஆகும்? அவர்களும் இறக்க நேரிடலாம்.

உதாரணமாக, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக, 8 நிமிடங்களுக்கு  பதிலாக ஆம்புலன்ஸ் வர 50 நிமிடங்கள் ஆகுமெனில், அதற்கு பிறகும்,  ஐ.சி.யூ- வும், மருத்துவரும் இல்லை எனில்  அந்த நோயாளியின் நிலை? இறப்பு மட்டுமே!

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.யுவில்  4 மில்லியன் பேர் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களில் 500,000 (~13%) பேர் இறக்கின்றனர். ஐ.சி.யூவில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டால், ~13% என்பது 80%க்கு மிக நெருக்கமாக இருக்கும். அதிலும் 50% மட்டுமே இறந்தாலும், ஒரு வருட காலத்தில் உயிர்சேதம் 500, 000 பேரில் இருந்து 20 இலட்சம் பேராக உயரும். அதாவது கூடுதலாக 15 இலட்சம் இறப்புகள் இணை சேதமாகக் கூடும்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட இயலாமல் பரவுமானால், அமெரிக்காவின் மொத்த சுகாதாரக் கட்டமைப்பும் ஸ்தம்பிக்கும்.  இறப்புகள் மில்லியன் கணக்கானவையாக இருக்கும். அது  10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம்.

இதே நிலைமை பெரும்பாலான நாடுகளுக்கும் பொருந்தும். ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை பொதுவாக அமெரிக்கா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் குறைவாக இருக்கும். கட்டுப்பாடற்ற கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுமானால், அது சுகாதாரக் கட்டமைப்பின் சரிவு அதாவது கூடம் கூட்டமான மரணம் என்றே பொருள்படும்.

இப்போது, ​​நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு நம்மிடம் உள்ள இரண்டு வழிமுறைகள் – தணிப்பு மற்றும் அடக்குமுறை. அதாவது கணக்கீட்டியல்படி உயரும் வரைபடத்தின் கோடுகள் கிடைமட்டமாக அதாவது தட்டையாக்கப்பட வேண்டும் என முன்மொழிகின்றனர். ஆனால் அவர்கள் அதை செயல்படுத்த தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் சற்றே சிந்திக்கக் வைப்பதாக உள்ளது.

வழிமுறை 2: தணிப்பு அல்லது தணிக்கை உத்தி

இதன்படி, “இப்போது கொரோனா வைரஸைத் தடுப்பது சாத்தியமில்லை, எனவே தொற்றுநோய்களின் உச்சத்தை குறைக்க முயற்சிக்கும்போது, அதை அதன் போக்கில் அனுமதித்து, சுகாதாரக் கட்டமைப்பினால் நிர்வகிக்கக்கூடிய வகையில் அமைந்ததும், நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். “வரைபட வளைவை சிறிது தட்டையாக்குவோம்” என முன்மொழியப்படுகிறது.

லண்டனின் இம்பீரியல் காலேஜில் இருந்து, வார இறுதியில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான ஆராய்ச்சி முடிவில் இது கூறப்பட்டுள்ளது. வெளிப்படையாக கூறுவதானால், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் போக்கை மாற்றம் காண வைத்துள்ளது.

இந்த வரைபடமும், இது முந்தையதைப் போலவே மிகவும் ஒத்த வரைபடமாகும். ஒரே மாதிரியாக இல்லை எனினும், கருத்தியல் ரீதியாக சமமானதாகும். இங்கே, கருப்பு வளைவு “எதுவும் ஒன்றும் செய்ய வேண்டாம்” என்பதைக் குறிக்கும். மற்ற வளைவுகள் ஒவ்வொன்றும் நாம் “கடுமையான” மற்றும் “கடுமையான சமூக இடைவெளியைப் பேணுதல்” போன்றவற்றைக் குறிப்பதாகும். நீல நிறமானது “தீவிர சமூக இடைவெளியைப் பேணுதல்” – ஐக் குறிக்கிறது. இது, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், நோய்தொற்று ஏற்படக்கூடிய நபர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் வயதானவர்களை ஒதுக்குதல் போன்றவை அடங்கும். இந்த நீலக்கோடு குறிப்பதே பரவலாக தற்போதைய இங்கிலாந்து கொரோனா வைரஸ் பரவலுக்கு கடைபிடிக்கப்படும் யுக்தி ஆகும். இதுவும், கட்டாயமாக்கப்படாத பரிந்துரையாகவே உள்ளது.

இங்கே மீண்டும், சிவப்பு கோடு இங்கிலாந்தில் உள்ள ஐ.சி.யுக்களின் கொள்ளளவுத் திறனைக் குறிக்கிறது. அந்த சிவப்புக் கோட்டின் மேலே உள்ள வளைவின் பகுதி அனைத்தும், ஐசியு வசதி கிடைக்காமல் போகக்கூடிய கொரோனா வைரஸ் நோயாளிகளைக் குறிக்கிறது, அவர்கள் பெரும்பாலும் இறக்க நேரிடலாம். அது மட்டுமல்லாமல், வளைவைத் தட்டையாக்குவதன் மூலம், ஐ.சி.யுக்கள் பற்றாக்குறை அதிகரித்து, இணை சேதத்தை அதிகமாக்கும்.

உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், “நாங்கள் சில தணிப்புகளைச் செய்யப் போகிறோம்” என அரசு கூறுவதன் உண்மையான பொருள் என்னவெனில், “நாங்கள் தெரிந்தே சுகாதாரக்  கட்டமைப்பை ஸ்தம்பிக்க வைத்து, இறப்பு விகிதத்தை குறைந்தபட்சம் 10 மடங்கு அதிகரிக்க செய்வோம்” என்பதேயாகும்.

இதுவே அதிகம் என்றாலும், மேலும் நாம் தெரிந்துக் கொள்ள புரிந்துக் கொள்ளவேண்டிய அம்சங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட யுக்தியின் மற்றொரு விளைவாக கருதப்படுவது – “ஒன்றுப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி” என்று அழைக்கப்படுகிறது.

ஒன்றுப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் மியுட்டேசன்

தொற்று ஏற்பட்டு, பின்னர் குணமடையும் அனைவரும் கொரோனா வைரஸிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்பது இதன் உட்பொருள். இதுவே இந்த யுக்தியின் மைய இலக்காகவும் உள்ளது. “சில மில்லியன் இறப்புகள் என்பது ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும், எஞ்சியிருக்கும் பல மில்லியன் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இதன் மூலம் கொரோனா வைரஸின் பிடியில் இருந்து முற்றிலுமாகவே விடுபடலாம்” என்பதே அவர்கள் முன்வைக்கும் வாதமாக உள்ளது. மேலும், “அவர்களை ஒரு வருடம் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்கவைத்து தனிமைப்படுத்தினால், இந்த உச்சநிலையில் ஏற்படக்கூடிய அபாயத்திற்கு மாற்றாக அமையும்” என்பதாகும்.

இதில் மற்றொரு அபாயம் ஒளிந்துள்ளது. வைரஸ் தனது மரபணு கட்டமைப்பை பெரிதாக மாற்றிக் கொள்ளவில்லை (MUTATION) அதாவது வைரஸின் மரபணுவில் மியூட்டேசன் எதுவும் ஏற்படவில்லை எனில் இது சரியே எனக் கூறலாம். வைரஸ் தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை,  மியூட்டேசன் ஏற்பட்டுவிட்டால்? இந்த வைரஸில் மியூட்டேசன் ஏற்படுவதற்கான சாத்தியம் எவ்வளவு? நாம் அறிந்தவரை, மியூட்டேசன் ஏற்கனவே ஏற்படுவதாகத் தெரிகிறது!!!!

இந்த வரைபடம் வைரஸின் வெவ்வேறு மியூட்டேசன் ஏற்பட்ட வகையைக் குறிக்கிறது. சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் ஊதா நிறத்தில் தொடங்கி, பின்னர் பரவுவதை நீங்கள் காணலாம். ஒவ்வொரு முறையும் வரைபடத்தின் இடது பக்கத்தில் ஏற்படும் கிளை ஒவ்வொன்றும் மியூட்டேசன் காரணமாகத் தோன்றிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆகும். அதாவது தற்போதைய COVID-19 – இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு ஆகும்.

இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்ல. கொரோனா வைரஸ் அல்லது ஃஃப்ளு வைரஸ்கள் போன்ற ஆர்.என்.ஏ அடிப்படையிலான வைரஸ்கள் டி.என்.ஏ அடிப்படையிலானவற்றை விட 100 மடங்கு அதிக மியூட்டேசன்கள் ஏற்பட்டு வேகமாக மாறுகின்றன – இருப்பினும் கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களை விட மெதுவாகவே மாறுகிறது.

பொதுவாக வைரஸ்கள் மியூட்டேசன்களை உருவாக்க அதற்கு மில்லியன் கணக்கான வாய்ப்புகள் தேவைப்படும். தற்போதைய அரசுகள் கடைப்பிடிக்கவுள்ள “தணிக்கை யுக்தி” அந்த வாய்ப்புகளை வழங்கப் போகிறது. காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ்கள் மியூட்டேசன்களால் மாறிக் கொண்டு வருவதாலேயே, நாம்  ஒவ்வொரு ஆண்டும் தடுப்பு ஊசிகளின் கூடுதல் டோஸ் போட்டுக் கொள்கிறோம்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: “தணிக்கை யுக்தி” அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற ஒரு நாடுகளில் மில்லியன் கணக்கான இறப்புகளை ஏற்படுத்தவே வாய்ப்புகள் அதிகம். மேலும், இது வைரஸ் அதிகமாக மியூட்டேசன்களை உருவாகாது என்ற வார்த்தைகளின் மேல் மக்களின் உயிரை பணயமாக்குகிறது. ஆனால் வைரஸ் மியூட்டேசன் அடையும் என்பது நமக்கு தெரியும்.  மேலும் சில மில்லியன் இறப்புகளை தற்போது ஏற்படுத்தும் தணிக்கை யுக்தி, அதன் பின்னர் அடுத்த சில மில்லியன் இறப்புகளுக்கு நம்மை ஆட்படுத்தும் அதுவும் – ஒவ்வொரு ஆண்டும். எதிர்காலத்தில் ஃஃப்ளு, நிமோனியா போன்று கொரோனாவும் தவிர்க்க இயலாத ஒன்றாகப் போகிறது. அதுவும் பலமடங்கு ஆபத்தானதாக!!!

“எதுவும் செய்யாமல் இருத்தல்” “தணிக்கை” யுக்திகள் செயல்படாது எனில் இதற்கான மாற்று வழி என்ன? இது “அடக்குமுறை” என்று அழைக்கப்படுகிறது.

விருப்பம் 3: அடக்குமுறை யுக்தி

தணிக்கை யுக்தி தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்காது, பதிலாக, விளைவுகளைக் குறிக்கும் வளைவை சிறிது தட்டையாக்கும் ஒரு வழிமுறை ஆகும். இதற்கிடையில், தொற்றுநோயை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அடக்குமுறை யுக்தி, மிகக்கடுமையான நடவடிக்கைகளை அமல்படுத்த பரிந்துரைக்கிறது. குறிப்பாக:

·       கடுமை காட்டுங்கள்: ஆரம்ப நிலையிலேயே, கடுமையான சமூக இடைவெளியைப் பின்பற்ற ஆணையிட வேண்டும். அதன்மூலம் வைரஸ் பரவல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

·       பின்னர், நடவடிக்கைகளை தளர்த்தும்போது, மக்கள் படிப்படியாக தங்கள் நடவடிக்கைகளை சுதந்திரமாகத் தொடரலாம்.

இதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

பரிமாற்ற விகிதத்தை R = 0.62 ஆகக் குறைக்க இப்போது ஒரு தடை உள்ளது என்பதைத் தவிர, அனைத்து மாதிரி அளவுருக்கள் ஒரே மாதிரியானவை, மேலும் சுகாதார அமைப்பு ஸ்தம்பிக்காததால்  இறப்பு விகிதம் 0.6% ஆக குறைகிறது. நடவடிக்கைகளைச் செயல்படுத்தும்போது, ​​000 32,000 நோயாளிகள் இருப்பதாக நான் கொள்ளப்பட்டுள்ளது. (இன்றைய நிலவரப்படி 3x அதிகாரப்பூர்வ எண், 3/19). தேர்ந்தெடுக்கப்பட்ட R க்கு இது உணர்வுபூர்வமாக இல்லை என்பதை நினைவில் கொள்க. உதாரணமாக 0.98 – ஆர் 15,000 இறப்புகளைக் காட்டுகிறது. இது 0.62 இன் R ஐ விட ஐந்து மடங்கு அதிகம், எனவே இது இன்னும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை  ஏற்படுத்தும். இது இறப்பு விகிதத்திற்கும் அதிக உணர்வுபூர்வமாக  இல்லை: இது 0.6% க்கு பதிலாக 0.7% என்றால், இறப்பு எண்ணிக்கை 15,000 முதல் 17,000 வரை மேலும் செல்லும். இது அதிக ஆர், அதிக இறப்பு விகிதம் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையை பெருகச் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதில் ஏற்படும் தாமதம். அதனால்தான் இன்று R ஐக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளக்கம்: பிரபலமான R0 என்பது ஆரம்பத்தில் R (நேரம் 0 இல் R) ஆகும். இதுவரை யாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதபோது ஏற்படும் பரிமாற்ற வீதமாகும், அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர் என்பது ஒட்டுமொத்த பரிமாற்ற வீதமாகும்.

ஒரு அடக்குமுறை யுக்தியின் கீழ், முதல் நிலை வைரஸ் தொடரில்  இறப்பு எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் மட்டுமே இருக்கும். ஏனெனில் நோய் தொற்றிய நோயாளிகளின் எண்ணிக்கை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் மூலம் ஆரம்பத்திலேயே கட்டுக்குள் வைக்கப்படுவதால், அதிவேக வளர்ச்சியை மட்டுமின்றி இறப்பு விகிதத்தையும் குறைக்கலாம். உதாரணமாக, தென் கொரியாவில் இன்று காணும் 0.9% இறப்பு விகிதத்தைப் எடுத்துக் கொள்ளலாம். இங்கே உபயோகப்படுத்தப்பட்ட “அடக்குமுறை யுக்தி” மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் சில நாடுகள் அடக்குமுறை யுக்தியை பின்பற்றுவதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன?

அரசாங்கங்கள் மூன்று விஷயங்களுக்கு அஞ்சுகிறார்கள்:

1.     இந்த முதல் முழுமையான மூடப்படுதல் யுக்தி பல மாதங்களுக்கு நீடிக்கலாம். இது பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தெரிகிறது.

2.     மாதக் கணக்கில் – நீண்டகாலத் தடை பொருளாதாரத்தை அழிக்கும்.

3.     இதுவும் பிரச்சினையை தீர்க்காது. ஏனென்றால் நீண்டக்கால தடை தொற்றுநோயை ஒத்திவைக்கும். பின்னர், தடை நீங்கியவுடன், ஒன்று கூடும் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகி, எப்படியும் மில்லியன் கணக்கானவர்கள் இறக்க நேரலாம்.

இம்பீரியல் காலேஜ் குழு வடிவமைத்த அடக்குமுறைகளை இங்கே காணலாம். பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அடக்குமுறையின் வெவ்வேறு தோற்றங்கள் ஆகும். அது வெளிப்படுத்தும் விளைவுகள் சரியானதாக இல்லை என்பதை நீங்கள் காணலாம். தீவிர அடக்குமுறைக்கு பின்னும் உச்சப்பட்ட விளைவுகள் ஏற்படுவதை இங்கே காணலாம்.

இந்தக் கணத்தில் நாம் அனைவராலும், கணிக்க மறந்த ஒரு அம்சம் இதில் உள்ளது. தணிக்கை மற்றும் அடக்குமுறை ஆகிய இரண்டு வாய்ப்புகளும் பெரிய அளவில் நல்ல பலன் தரக்கூடியதாக தெரியவில்லை. ஒன்று பொருளாதாரத்தை பாதிக்காத பெரும் எண்ணிக்கையிலான மரணம் மற்றொன்று பொருளாதாரத்தை பாதிக்கும் சிறிய எண்ணிக்கையிலான மரணம். ஆனால், இதில் இரண்டுக்கும் இடையிலான, எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள மறக்கப்பட்டுள்ளது.

3. நேரத்தின் மதிப்பு

உயிர்களைக் காப்பாற்றுவதில் இருந்த நேரத்தின் மதிப்பை விளக்கி பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் வைரஸ் பரவல் மற்றும் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில் 40% வரை ஏற்படுத்திய முன்னேற்றத்தை கூறியிருந்தோம். ஆனால் நேரம் அதை விட மதிப்புமிக்கது.

வரலாற்றில் இதுவரை கண்டிராத, சுகாதார கட்டமைப்பின் மீது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அழுத்தத்தை நாம் சந்திக்க உள்ளோம். நாம் தற்போது கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியை சந்திக்க முற்றிலும் தயாராக இல்லை. ஒரு போருக்கு இது ஒரு நல்ல நிலைப்பாடு இல்லை.

நீங்கள் ஒரு மோசமான எதிரியை எதிர்கொள்ளப் போகிறீர்கள் எனில், உங்களுக்கு இரண்டு வழிகள் இருகின்றன. ஒன்று, எப்படியாயினும், அதை நேரடியாக எதிர்கொள்வது அல்லது நீங்கள் தயாராவதற்கு தேவையான நேரத்தைப் பெற அப்போதைக்கு தப்பித்தல். நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? இதைத்தான் இன்று நாம் செய்ய வேண்டும். உலகம் விழித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸை தாமதப்படுத்தி, நாம் சிறப்பாக தயாராகலாம்.

அந்த நேரம் நமக்கு என்னவாகும் என்பதை அடுத்த பகுதிகள் விவரிக்கின்றன:

நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்தல்: சிறப்பான “அடக்குமுறை யுக்தி” – யில் நோய் தொற்றிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே இரவில் வீழ்ச்சியடைநத்தை கடந்த வாரம் நாம் ஹீபே – வில் கண்டோம்.

இன்றைய நிலவரப்படி, ஹூபேயின் 60 மில்லியன் மக்களைக் கொண்ட அந்த மிகப்பெரிய பிராந்தியத்தில், தற்போது பதிவாகும்  தினசரி புதிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும்.

நோயறிதல்கள் சோதனைகள் சில வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெறும்போது, நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். ஒருகட்டத்தில் குறைவான எண்ணிக்கையுடன், இறப்பு வீதமும் குறையத் தொடங்குகிறது. கூடுதலாக வைரஸ் அல்லாத காரணங்களால் ஏற்படும் இணை சேதமும் குறைகிறது. ஏனெனில் சுகாதார கட்டமைப்பு சிறப்பாக அதிகக் கொள்ளளவுடன் இருக்கும்.

அடக்குமுறை யுக்தியினால் நாம் பெறுவது:

·       குறைந்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை

·       சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் அதை இயக்கும் மனிதர்களுக்கு உடனடி ஒய்வு

·       இறப்பு விகிதத்தில் குறைப்பு

·       இணை சேதத்தில் குறைப்பு

·       பாதிக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்பான ஒய்வு மற்றும் வேலைக்கு திரும்பும் திறன்.

இத்தாலியில், 8% சுகாதாரத் தொழிலாளர்கள் அனைத்து வகை தொற்றுநோய்களைப் பரப்பும் காரணிகளாக உள்ளனர்.

உண்மையான சிக்கலைப் புரிந்து கொள்ளுங்கள்:

சோதனை மற்றும் கண்டறிதல்

இப்போது, ​​இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகளில். உண்மையான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அவர்களுக்கே தெரியாது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எண்ணிக்கைகள் சரியானது அல்ல என்று அனைவரும் அறிவார்கள். உண்மையான எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கும். நோய் பரிசோதனை மற்றும் கண்டறிதல் சரியாக நடைபெறாததால் உண்மை எண்ணிக்கை சரிவர கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.

இன்னும் சில வாரங்களில், பரிசோதனை செய்வதற்கான வசதிகளை  பெற்றதும், அனைவரையும் சோதிக்கத் தொடங்கலாம். அதன்மூலம் நோயாளிகளின் உண்மை நிலவரத்தை அறியலாம்.  தகவலுடன், பிரச்சினையின் உண்மையான அளவை நாங்கள் அறிவோம். பின்னர் அடக்குமுறையின் உண்மையான ஆக்ரோஷத்துடன் இருக்கலாம். யாரையெல்லாம் அடக்குமுறையில் இருந்து விடுவிக்கலாம் என கணக்கிட்டு செயல்படலாம்.

சோதனை முறைகள்

புதிய சோதனை முறைகள், சோதனையை விரைவுப்படுத்துவதோடு செலவுகளை கணிசமாகக் குறைக்கும். சீனாவிலோ அல்லது பிற கிழக்கு ஆசியா நாடுகளிலோ  வைத்திருப்பதைப் போன்ற ஒரு காரணமறிதல் நடவடிக்கையை அமைக்க முடியும். ஒவ்வொரு நோயுற்ற நபரும் சந்தித்த அனைவரையும் அடையாளம் காண முடியும், மேலும் அவர்களை தனிமைப்படுத்தலாம். இது எங்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை வடிவமைத்து வெளியிட தேவையான அறிவை வழங்கும்.

வைரஸ் எங்குள்ளது என்பது அறிந்தால், இந்த இடங்களை மட்டுமே குறிவைத்து நிவாரணமளிக்க இயலும். இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. மற்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், பலத்த, கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகள் இல்லாமல் கிழக்கு ஆசியா நாடுகள் இந்த பரவலை வெற்றிகரமாக எவ்வாறு கட்டுப்படுத்த முடிந்தது என்பதற்கான அடிப்படைகள் இது. சோதனை மற்றும் தடமறிதல் நடவடிக்கைகள் தென் கொரியாவில் கொரோனா வைரஸின் வளர்ச்சியை, தொற்று நோயை, கடுமையான சமூக இடைவெளியை வலுவாக திணிக்காமல், கட்டுக்குள் கொண்டுவந்தது.

கொள்ளளவுத் திறனை உருவாக்க வேண்டும்:

சுருங்கக் கூறுவதானால், அமெரிக்கா (மற்றும் மறைமுகமாக இங்கிலாந்து) கவசம் இல்லாமல் போருக்குச் செல்லவிருக்கிறது. மக்களிடம் தற்போது  இரண்டு வாரங்களுக்குத் தேவையான  முகக்கவசங்கள் உள்ளன. ஆனால், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (“பிபிஇ”), போதுமான வென்டிலேட்டர்கள், ஐசியு படுக்கைகள், ஈசிஎம்ஓக்கள் (இரத்த ஆக்ஸிஜனேற்ற இயந்திரங்கள்) இல்லை. இதனால்தான் தணிக்கை யுக்தியில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் .

ஆனால், நாம் தயாராகத் தேவையான சிறிது நேரம் பெறுவோமானால், எதிர்கால நோய் தீவிரத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்க உரிய நேரம் கிடைக்கும். இறப்பு விகிதத்தைக் குறைக்க முகக்கவசங்கள், பிபிஇக்கள், வென்டிலேட்டர்கள், ஈசிஎம்ஓக்கள் மற்றும் வேறு எந்த முக்கியமான சாதனத்தின் உற்பத்தியையும் விரைவாக உருவாக்க முடியும்.

வேறுவிதமாகக் கூறவேண்டுமானால், தேவையான கவசத்தைப் பெற ஆண்டுகள் தேவையில்லை, சில வாரங்கள் போதும். இப்போது இந்த உற்பத்தியைப் பெறுவதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நாடுகள் அணி திரட்டப்படுகின்றன. வென்டிலேட்டர் பாகங்களுக்கு 3 டி பிரிண்டிங்கைப் பயன்படுத்துவது போன்றவற்றை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். நாம் அதை செய்ய முடியும்.

நமக்கு தற்போது தேவையாது நேரம் மட்டுமே. ஒரு மரண எதிரியை எதிர்கொள்ளும் முன் சில கவசங்களைப் பெறுவதற்கு சில வாரங்கள் காத்திருக்கலாம் இல்லையா?

இது நமக்குத் தேவையான ஒரே திறன் அல்ல. நமக்கு விரைவில் அதிக எண்ணிக்கையிலான சுகாதார ஊழியர்கள் தேவைப்படுவார்கள். அவற்றை எங்கிருந்து பெறுவோம்? செவிலியர்களுக்கு உதவ நாம் மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், மேலும் மருத்துவ பணியாளர்களை ஓய்வில் இருந்து திரும்பப் பெற வேண்டும். பல நாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, ஆனால் இதற்கு நேரம் தேவைப்படுகிறது. சில வாரங்களில் இதை நாம் செய்ய முடியும். ஆனால் மொத்த கட்டமைப்பும் ஸ்தம்பித்த பின் அல்ல.

குறைந்தபட்ச பொது தொற்று

தற்போது பொதுமக்கள் மிகுந்த பயத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் அனைவருக்கும் புதியது. என்ன செய்வது என்று மக்களுக்குத் தெரியவில்லை! கைகுலுக்கலை நிறுத்த மக்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இன்னும் கட்டிப்பிடிக்கிறார்கள். அவர்கள் முழங்கையால் கதவுகளைத் திறக்கத் தெரியவில்லை. கதவு கைப்பிடியை தொட்ட பிறகு அவர்கள் கைகளைக் கழுவ மாட்டார்கள். உட்கார்ந்த முன்னும் பின்னும் மேகை நாற்காலிகளை கிருமி நீக்கம் செய்ய மாட்டார்கள்.

நமக்கு போதுமான போதுமான முகக் கவசங்கள் கிடைத்தவுடன், அவற்றை வெளியே பயன்படுத்தலாம். இப்போது, அவற்றை சுகாதாரப் பணியாளர்களுக்காக வைத்திருப்பது நல்லது. அவர்களுக்கு பற்றாக்குறை இல்லாவிட்டால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் அவற்றை அணிய வேண்டும். இதனால் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். சரியான பயிற்சியுடன் அணிபவர்கள் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. (இதற்கிடையில், எதையாவது அணிவது எதையும் விட சிறந்தது.)

இவை அனைத்தும் பரிமாற்ற வீதத்தைக் குறைக்க மிகவும் எளிய வழிகள் ஆகும். எவ்வளவு குறைவாக இது பரவுகிறதோ, அவ்வளவு குறைவான வழிமுறைகளே நமக்கு தேவை. ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மக்களுக்குக் கற்பிப்பதற்கும் அவர்களைச் தயார்படுத்துவதற்கும் நமக்கு நேரம் தேவை.

வைரஸைப் புரிந்து கொள்ளுங்கள்

வைரஸ் பற்றி நமக்கு மிகக் குறைவே தெரியும். ஆனால் ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான புதிய ஆவணங்கள் வெளிவருகின்றன.

உலகம் இறுதியாக ஒரு பொதுவான எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. இந்த வைரஸை நன்கு புரிந்துகொள்ள உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

வைரஸ் எவ்வாறு பரவுகிறது? தொற்று எவ்வாறு குறைக்க முடியும்? அறிகுறியற்ற, ஆனால் வைரஸ் தொற்றியவர்களின் பங்கு என்ன? அவர்களால் தொற்று நோய் உண்டாக்க முடியுமா? எந்த அளவிற்கு? நல்ல சிகிச்சைகள் என்ன? இது எவ்வளவு காலம் உயிர்வாழும்? எதன் மீதெல்லாம்? வெவ்வேறு சமூக இடைவெளி நடவடிக்கைகள் பரிமாற்ற வீதத்தை எவ்வாறு பாதிக்கின்றன? அதற்கான விலை என்ன? சிறந்த நடைமுறைகளைக் கண்டுபிடிப்பது எவ்வாறு?  சோதனைகள் எவ்வளவு நம்பகமானவை?

இந்த கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் இணை பொருளாதார மற்றும் சமூக சேதங்களை குறைக்கும்போது முடிந்தவரை சரியான இலக்கை குறிக்க இதன் பதில்கள் உதவும். அவர்கள் வாரங்களில் வருவார்கள். ஆண்டுகளில் அல்ல.

சிகிச்சைகள் கண்டுபிடிக்க

அது மட்டுமல்ல, அடுத்த சில வாரங்களில் ஏதேனும் ஒரு சிகிச்சை கண்டறியப்பட்டால் என்ன செய்வது? நாம் வாங்கும் ஒவ்வொரு நாளும் நல்லதொரு சிகிச்சையை நோக்கி நாம் நகர்கிறோம். ஏற்கனவே இப்போது சந்தைகளில் ஃபாவிபிராவிர், குளோரோகுயின் அல்லது குளோரோகுயின் இணைந்த அசித்ரோமைசின்  போன்ற மருந்துகள் உள்ளன. இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸுக்கு ஒரு சிகிச்சையை நாம் கண்டறிந்தால் என்ன செய்வது? அதற்குள் பல மில்லியன் மரணங்களை தரவல்ல “தணிக்கை” முறையை பின்பற்றி மரணங்கள் ஏற்பட்டால் நாம் எவ்வளவு முட்டாள்களாக இருப்போம்?

செலவு-நன்மைகளைப் புரிந்து கொள்ளுங்கள்

மேலே உள்ள அனைத்து காரணிகளும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற போதுமானதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியாது. அவர்கள் எல்லா மக்கள்தொகை பற்றியும் சிந்திக்க வேண்டும். மேலும் கடுமையான சமூக இடைவெளி கடைபிடிக்கும் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

வெவ்வேறு சமூக இடைவெளி நடவடிக்கைகள் எவ்வாறு வைரஸ் பரவுவதைக் குறைக்கின்றன என்பது தற்போது நமக்குத் தெரியாது. அவற்றின் பொருளாதார மற்றும் சமூக செலவுகள் என்ன என்பதற்கான தகவல்கள் நம்மிடம் இல்லை. அது தெரியாவிட்டால், நீண்ட காலத்திற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதன் தேவை குறித்து தீர்மானிப்பது சற்று கடினம் அல்லவா? சில பெரும் சில வாரக் காலம் அவற்றைப் படிக்கத் தொடங்கவும், அவற்றைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், எந்தெந்தவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும் நமக்கு போதுமான நேரம் கொடுக்கும்.

குறைவான வழக்குகள், சிக்கலைப் பற்றிய கூடுதல் புரிதல், தேவையான வசதிகளை உருவாக்குதல், வைரஸைப் புரிந்துகொள்வது, வெவ்வேறு நடவடிக்கைகளின் செலவு-பயனைப் புரிந்துகொள்வது, பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல், பயிற்சியளித்தல் இவை அனைத்தும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான சில முக்கிய கருவிகள் ஆகும். மேலும் பலவற்றை உருவாக்க நமக்கு தேவை சில வாரங்களே ஆகும். அதற்கு பதிலாக, குருட்டுத்தனமாக ஒரு யுக்தியை கையாள்வது என்பது ஆயத்தமில்லாமல் போரில் ஈடுபட்டு, நம் எதிரியின் வாயில் நேரடியாக நம்மை எறிவது போன்றதாகும்.

4. சுத்தியல் மற்றும் நடனம்

தணிக்கை யுக்தி என்பது அநேகமாக ஒரு பயங்கரமான தேர்வு என்பதையும், அடக்குமுறை வியூகம் ஒரு பெரிய குறுகிய கால நன்மையைக் கொண்டுள்ளது என்பதையும் இப்போது நாம் அறிவோம். ஆனால் இந்த யுக்தியைப் பற்றி மக்களுக்கு சரியான கவலைகள் உள்ளன.

·       இது உண்மையில் எவ்வளவு காலம் நீடிக்கும்?

• இது எவ்வளவு செலவு பிடிக்கும்?

·       “எதையும் செய்யாமல் இருத்தலில்“ இருந்தது போன்ற இரண்டாவது உச்சப்பட்ட விளைவு ஏற்படுமா? போன்றவை ஆகும்.

இங்கே, உண்மையான அடக்குமுறை உத்தி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கப்போகிறோம். நாம் அதை சுத்தி மற்றும் நடனம் என்று அழைக்கலாம்.

சுத்தியல்

முதலில், நாம் விரைவாகவும் ஆக்ரோஷமாகவும் செயல்படுகிறோம். நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து காரணங்களுக்காகவும், நேரத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை விரைவில் தணிக்க விரும்புகிறோம்.

மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று: இது எவ்வளவு காலம் நீடிக்கும்?

எல்லோரிடமும் இருக்கும் அச்சம் என்னவென்றால், அடுத்தடுத்த பொருளாதார பேரழிவு மற்றும் மன முறிவுகளுடன், ஒரு மாதத்திற்கு அனைவரும், அவர்களது வீடுகளுக்குள் அடைக்கப்பட்டிருப்போம். இந்த யோசனை துரதிர்ஷ்டவசமாக புகழ்பெற்ற இம்பீரியல் காலேஜ் அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த விளக்கப்படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை செல்லும் வெளிர் நீல பகுதி, ஹேமர் என அந்த அறிக்கை பரிந்துரைக்கும் காலம் ஆகும். இது கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஆரம்ப அடக்குமுறை ஆகும்.

நீங்கள் ஒரு அரசியல்வாதியாக இருந்தால், இந்த வாய்ப்பு நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான மக்களை “தணிக்கை” யுக்தியில் இறக்க அனுமதிப்பதையும், ஐந்து மாதங்களுக்கு பொருளாதார வளர்ச்சியை நிறுத்தபடுவதையும் காண்பீர்கள். ஆனால், இது அவ்வாறு இருக்க தேவையில்லை. இந்த ஆய்வறிக்கை, இன்று அதன் முக்கிய குறைபாடுகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது: அவை தொடர்புத் தடமறிதலை (தென் கொரியா, சீனா அல்லது சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளின் மிக முக்கிய கொள்கைகள் ஆகும்.) புறக்கணிக்கின்றன. மேலும் பயணக் கட்டுப்பாடுகளை (சீனாவில் பயன்படுத்தப்பட்ட யுக்தி) புறக்கணிக்கின்றன. மேலும் பெரிய அளவிலான கூட்டம் கூடுதலின் தாக்கத்தையும் ஒதுக்கியது. சுத்தியலுக்குத் தேவையான நேரம் வாரங்கள், மாதங்கள் அல்ல.

இந்த வரைபடம் 1/23 முதல் ஒவ்வொரு நாளும் முழு ஹூபே பிராந்தியத்தில் (60 மில்லியன் மக்கள்) தொற்று ஏற்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டுகிறது. 2 வாரங்களுக்குள், நாடு மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்கியது. ~ 5 வாரங்களுக்குள் அது முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. 7 வாரங்களுக்குள் புதிய நோயறிதல் உபயோகமாக இருந்தது. அதே சமயம், சீனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதை நினைவில் கொள்வோம்.

இவை ஆரஞ்சு நிற கம்பங்கள் என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். சாம்பல் நிற கம்பங்கள் புதிய எண்ணிக்கையை குறிப்பிட்டு, எண்ணிக்கை முன்கூட்டியே குறைய ஆரம்பித்ததை காட்டுகின்றன. (விளக்கப்படம் 9 ஐப் பார்க்கவும்).

அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் இத்தாலி, ஸ்பெயின் அல்லது பிரான்சில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மிகவும் ஒத்ததாக இருந்தன: தனிமைப்படுத்தல், ஒதுக்கி தனிமைப்படுத்தல், அவசரநிலை இல்லாவிட்டால் அல்லது  உணவு, தொடர்புத் தடமறிதல், சோதனை, அதிக மருத்துவமனை படுக்கைகள், பயணத் தடைகள் போன்ற காரங்களை அன்றி, வீட்டிலேயே தங்கியிருத்தல்.

இருப்பினும் விவரங்கள் மிக முக்கியமானது ஆகும். சீனாவின் நடவடிக்கைகள் வலுவானவை. உதாரணமாக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை, வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே உணவு வாங்க வெளியே செல்ல வெளியேற அனுமதிக்கப்பட்டனர். மேலும், அவற்றின் அமலாக்கம் கடுமையாக இருந்தது. இந்த தீவிரம் தொற்றுநோயை வேகமாக நிறுத்தியிருக்கலாம்.

இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில், நடவடிக்கைகளும்,  அவற்றின் செயல்படுத்தலும் அவ்வளவு கடினமானதல்ல. மக்கள் இன்னும் தெருக்களில் முகக் கவசம் இல்லாமல் நடக்கிறார்கள், இது மெதுவான சுத்தியலை ஏற்படுத்தக்கூடும்: தொற்றுநோயை முழுமையாகக் கட்டுப்படுத்த அதிக நேரமும் எடுக்கலாம். சிலர் இதை “ஜனநாயகங்களால் ஒருபோதும் இந்த குறைப்பு நிகழ்வுகளை மீண்டும் செய்ய முடியாது” என்று விளக்குகிறார்கள். அது தவறு.

பல வாரங்களாக, தென் கொரியா, சீனாவுக்கு அடுத்ததாக மிக மோசமான தொற்றுநோயைக் கொண்டிருந்தது. இப்போது, இது பெரும்பாலும் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அவர்கள் வீட்டிலேயே இருக்கும்படி மக்களிடம் கேட்காமல் செய்தார்கள். அவர்கள் பெரும்பாலும் மிகவும் தீவிர சோதனை, தொடர்புகளை அறிதல் மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல்கள் மற்றும் தனிமைப்படுத்தல்கள் மூலம் அதை அடைந்தனர்.

தென் கொரியா போன்ற நாட்டில், ஒரு பெரிய பரவலை கட்டாய சமூக இடைவெளி நடவடிக்கைகள் இல்லாமல், வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் எனில், மேற்கத்திய நாடுகள், ஏற்கனவே அமல்படுத்டியிருக்கும் கடுமையான சமூக இடைவெளி ந வடிக்கைகளுடன் நிச்சயமாக வாரங்களுக்குள் பெரும் பரவலைக்  கட்டுப்படுத்த முடியும். இது ஒழுக்கம், செயல்படுத்தல் மற்றும் மக்கள் எவ்வளவு விதிகளை பின்பற்றுகிறார்கள் போன்றவற்றை பொறுத்தது ஆகும்.

இது சுத்தியலுக்குப் பின்னரான கட்டத்தின் கடினத்தன்மையைப் பொறுத்தது: அது, நடனம் ஆகும்.

 நடனம்

நாம் கொரோனா வைரஸ் பரவலை சுத்தியல் நடவடிக்கைகள் மூலம் சில வாரங்கள் கட்டோடுத்தியிருக்கிறோம். தற்போது, அதற்கான தடுப்பூசி வரும் வரை இந்த வைரஸைக் கட்டுப்படுத்த நீண்டகால முயற்சி தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டத்தைப் பற்றி சிந்திக்கும்போது மக்கள் செய்யும் மிகப் பெரிய, மிக முக்கியமான தவறு இதுவாக இருக்கலாம்: இது பல மாதங்களாக அவர்களை வீட்டிலேயே வைத்திருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது அப்படியல்ல. உண்மையில், நம் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிகிறது.

பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான நடனம்

தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் மற்றும் ஜப்பான் நாடுகளில் புதிய நோயாளிகள் வருகை அதிக அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவைகள் ஏன் முழுமையாக மூடப்படவில்லை?

இந்த வீடியோவில், தென் கொரியா வெளியுறவு மந்திரி தனது நாடு எவ்வாறு அதை அடைந்து என விளக்குகிறார். இது மிகவும் எளிமையானது: திறமையான பரிசோதனைகள், திறமையான காரணமறிதல், பயணத் தடைகள், திறமையான தனிமைப்படுத்தல் மற்றும் கடுமையான தனிமைப்படுத்தல் போன்றவையாகும்.

இந்த கட்டுரை சிங்கப்பூரின் அணுகுமுறையை விளக்குகிறது:

அவர்களின் நடவடிக்கைகளை யூகிக்க வேண்டுமா? தென் கொரியாவில் உள்ளதைப் போலவே, அவர்களும் தனிமைப்படுத்தல், பயணத் தடைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு பொருளாதார உதவியுடன் பூர்த்தி செய்தனர்.

மற்ற நாடுகளுக்கு இது தாமதமா? இல்லை. சுத்தியலைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த யுக்தியை செயல்படுத்துவதற்கான புதிய வாய்ப்பைப் பெறுவீர்கள்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போதாது என்றால் என்ன செய்வது?

ஆர் – இன் நடனம்

சுத்தியலுக்கும், ஒரு தடுப்பூசி அல்லது பயனுள்ள சிகிச்சைக்கு இடையிலான மாத காலத்தை நாம் கருதுவோம். ஏனெனில் இதில் நடவடிக்கைகள் எப்போதும் ஒரே மாதிரியான கடுமையான காலகட்டமாக இருக்காது. சில பகுதிகள் மீண்டும் பரவலைக் காணும், சில இடங்களில் புதிய எண்ணிக்கை நீண்ட காலத்திற்கு இருக்காது. புதிய பரவல் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பொறுத்து, நாம் சமூக இடைவெளி நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் அல்லது விடுவிக்க முடியும். இது ஆர் இன் நடனம்: நமது வாழ்க்கையை மீண்டும் சீரான பாதையில் கொண்டு செல்வதற்கும் நோயைப் பரப்புவதற்கும் இடையிலான நடவடிக்கைகளின் நடனம் ஆகும். இது பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கையும் ஆகும்.

இந்த நடனம் எவ்வாறு செயல்படுகிறது?

இது அனைத்தும் ஆர். ஐ சுற்றி வருகிறது. உங்களுக்கு நினைவிருந்தால், அது ஒரு பரிமாற்ற வீதமாகும். ஒரு நிலையான, ஆயத்தமில்லாத நாட்டில் ஆரம்பத்தில், இது 2 முதல் 3 வரை எங்காவது இருக்கிறது: யாரோ ஒருவர் பாதிக்கப்பட்ட சில வாரங்களில், அவர்கள் சராசரியாக 2 முதல் 3 பேர் வரை மற்றவர்களை பாதிக்கிறார்கள்.

ஆர் “1” க்கு மேல் இருந்தால், நோய்த்தொற்றுகள் அதிவேகமாக ஒரு தொற்றுநோயாக வளர்கின்றன. இது 1 க்கு கீழே இருந்தால், அவர்கள் கீழே இறந்துவிடுவார்கள்.

சுத்தியலின் போது, ஆர் பூஜ்ஜியத்திற்கு நெருக்கமாக, முடிந்தவரை விரைவாக, தொற்றுநோயைத் தணிப்பதே குறிக்கோள். வுஹானில், ஆர் ஆரம்பத்தில் 3.9 என்று கணக்கிடப்பட்டது, மற்றும் மூடுதல் மற்றும் மையப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, அது 0.32 ஆக குறைந்தது.

ஆனால் நீங்கள் நடனத்திற்குச் சென்றதும், அதை இனி செய்ய வேண்டியதில்லை. 1 க்கு கீழே இருக்க, உங்கள் ஆர் தேவை: சமூக இடைவெளி நடவடிக்கைகள் நிறைய மக்கள் மீது உண்மையான, கடினமான இழப்புகளை வழங்குகின்றன. அவர்கள் வேலை, தொழில், ஆரோக்கியமான பழக்கங்களை இழக்க நேரிடும். சில எளிய நடவடிக்கைகளுடன் நீங்கள் R = 1 க்கு கீழே இருக்க முடியும்.

விரிவான தரவு, ஆதாரங்கள் மற்றும் அனுமானங்கள்

இது பல்வேறு வகையான நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றின்போது என்னவாகிறது என்பதன் தோராய கணக்கீடு ஆகும். அத்துடன் அவர்களின் தொற்றுநோய் பரப்பும் திறனும் கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கான வரைபடத்தில், அதற்கான வளைவின் உண்மையான வடிவம் யாருக்கும் தெரியாது. ஆனால் அது எப்படி இருக்கும் என்பதை தோராயமாக வெவ்வேறு ஆவணங்களிலிருந்து கணக்கீடுகளை வைத்து சேகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் வைரஸைக் கட்டுப்படுத்திய பிறகும், சிலருக்கு இன்னும் தொற்று நோயை பரப்பும் திறன் கொண்டுள்ளனர். சராசரியாக இவர்களால் 2.5 புதிய தொற்றுநோயாளிகளை உண்டாக்குகின்றனர்.

“அறிகுறிகள் இல்லாத” கட்டத்தில் இந்நிலையில் உள்ளவர்களால் புதிதாக சில நோய் தொற்றுக்களை உண்டாக்கப்படுகின்றன.  அதன்பிறகு, அறிகுறிகள் வளரும்போது, ​​பொதுவாக மக்கள் மருத்துவரிடம் சென்று, நோயறிதலைப் பெறுகிறார்கள், மேலும் அவர்களின் தொற்று குறைகிறது.

உதாரணமாக, ஒருவருக்கு ஆரம்பத்தில் வைரஸ் உள்ளது, ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை எனக் கொண்டால், அவர் சாதாரணமாகவே மற்றவர்களுடன் பழகுகிறார். இதனால் மற்றவர்களுக்கும் நோய் தொற்றை உண்டாக்குகிறார். ஒருவருக்கும் எவ்வளவு வைரஸ் வளர்ந்து கொண்டிருக்கிறதோ, அதே அளவுக்கு அவர்கள் புதிய நோயாளிகளை உண்டாக்குகிறார்கள். மெதுவாக அறிகுறிகளைப் பெற ஆரம்பித்தவுடன், தனைகளை தனிமைபடுத்திக் கொள்கிறார்கள்.  வைரஸின் பரவல் குறைய ஆரம்பிக்கிறது.

ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன்,  அவருக்கு நோய் பரப்பும் திறன் இருந்தாலும், தனிமைப்படுத்தப்படுவதால் வைரஸைப் பரப்புவதில்லை.

சிங்கப்பூர் அல்லது தென் கொரியா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட நோய்பரவல் கொள்கைகளின் பெரிய தாக்கத்தை நீங்கள் காணலாம்:

மக்கள்: மக்கள் பெருமளவில் பரிசோதிக்கப்பட்டால், அறிகுறிகள் இருப்பதற்கு முன்பே அவர்களை அடையாளம் காண முடியும். தனிமைப்படுத்தப்பட்ட, அவர்களால் எதையும் பரப்ப முடியாது.

அவர்கள்: முன்னதாகவே அவர்களின் அறிகுறிகளை அடையாளம் காண மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டால், அவை நீல நிறத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன, எனவே அவற்றின் ஒட்டுமொத்த தொற்றுநோயும், மற்றும் பரப்பும் தன்மையும் குறையும்.

அறிகுறிகள்: அறிகுறிகள் தோன்றியவுடன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டால், ஆரஞ்சு கட்டத்திலிருந்து வரும் தொற்றுகள் மறைந்துவிடும்.

இடைவெளி: தனிப்பட்ட சமூக இடைவெளி, முகக்கவசம்  அணிவது, கைகளை கழுவுதல் அல்லது கிருமி நீக்கம் செய்வது பற்றி மக்கள் விழிப்புணர்வு பெற்றால், அவர்கள் முழு காலத்திலும் குறைவான வைரஸை பரப்புகிறார்கள். இவை அனைத்தும் தோல்வியுற்றால் மட்டுமே நமக்கு தீவிரமான சமூக இடைவெளி நடவடிக்கைகள் தேவை.

சமூக இடைவெளி நடவடிக்கையில் ஆர் – ன் மதிப்பு

இந்த எல்லா நடவடிக்கைகளுக்கு பின்னரும், இன்னும் R = 1 ஐ விட அதிகமாக இருந்தால், ஒவ்வொரு நபரும் சந்திக்கும் இயலும் நபர்களின் சராசரி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன் (எ.கா., 50, 500) நிகழ்வுகளைத் தடை செய்வது, அல்லது முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி மக்களைக் கேட்பது போன்ற சில எளிய  வழிகள் உள்ளன. மேலும், பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடுவது, எல்லோரையும் வீட்டிலேயே இருக்கச் சொல்வது, அல்லது வணிகங்களை மூடுவது போன்ற பொருளாதார, சமூக வழிகளும் உள்ளன.

இந்த விளக்கப்படம் இதுவரை இல்லாததால் கிடைத்த தரவுகளின்படி, உருவாக்கப்பட்டது. இன்றுவரை இதனைப்பற்றி போதுமான ஆராய்ச்சி செய்யப்படவில்லை அல்லது அவற்றை ஒப்பிடக்கூடிய வகையில் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கவில்லை.

இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் அரசுகள் அல்லது  அதிகாரிகள் எடுக்கவேண்டிய முடிவுகளை விளக்கக்கூடிய ஒரு முக்கிய வரைபடம் இதுவாகும். சுத்தியல் காலத்தில், அரசு R ஐ முடிந்தவரை குறைக்க விரும்புகிறார்கள், அதுவும், மக்களுக்கு பொறுத்துக் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் மூலம். ஹூபேயில், அனைத்து வழிகளும் கடைப்பிடிக்கப்பட்டு, 0.32 க்குச் சென்றனர். ஆனால் மற்றவர்களுக்கு அவ்வளவு தீவிரம் தேவையில்லை: ஒருவேளை 0.5 – 0.6 ஆக இருந்தாலும் பரவாயில்லை.

ஆனால், ஆர் காலகட்டத்தின் நடனத்தின் போது, ​​நீண்ட காலம் 1 க்கு அருகில் இருக்க விரும்புகிறார்கள். இது ஒரு புதிய பெரும் பரவலை அதுவும், கடுமையான நடவடிக்கைகளை தளர்த்தும்போது உண்டாகும் என நம்பப்படும் பரவலை தடுக்கும் என நம்புகிறார்கள்.

இறுதியாக, அரசுகள் உணர்ந்தாலும், இல்லாவிடிலும் அவர்கள் செய்யக் கூடியதாக நம்புவது இதுவே,

·       R-ஐ குறைக்கும் நடவடிக்கைகளைப் பட்டியலிடுதல்

·       அவற்றின் பயன்களை புரிந்துக் கொள்ளுதல்: ஆர்-ன் மதிப்பு  குறைப்பு.

·       செலவு: பொருளாதார, சமூக மற்றும் நெறிமுறை இழப்புகளை கணக்கிடுதல்.

·        இழப்புகள் மற்றும் நன்மைகளின் அடிப்படையில் முன்முயற்சிகளை எடுத்தல்.

·       R=1 வரை மிகப் பெரிய R குறைப்பைக் ஏற்படுத்தும் வழிகளை மிகக் குறைந்த செலவில் தேர்ந்தெடுத்தல்.

இது முழுக்க அனைவருக்கும் புரியவைக்கும் நோக்கத்திற்காக  மட்டுமே. இதன் அனைத்து தரவும் உருவாக்கப்பட்டவை ஆகும்.  இந்த தரவுகள் அனைத்தும் இன்று வரை இல்லை. ஆனால், கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சி.டி.சி யின் பட்டியல் ஒரு சிறந்த தொடக்கமாகும், ஆனால் இது கல்வி நடவடிக்கைகள், நோய் தொடக்கம் மற்றும் பரவலை தூண்டுதல், அதன் செலவுகள் மற்றும் நன்மைகளின் அளவீடுகள், அளவீட்டு விவரங்கள், பொருளாதார / சமூக எதிர்வினைகள் போன்றவற்றை விலக்குகிறது. ஆரம்பத்தில், இந்த எண்கள் மீதான அனைவரின் நம்பிக்கையும் குறைவாக இருக்கும். ஆனால், அதைப்பற்றி சிந்திக்க தொடங்க வேண்டும்.

மேலும், இது அனைவரும் செய்ய வேண்டிய செயல்முறையை முறைப்படுத்துவதாகும்: மேலும் இது எண்களின் விளையாட்டு என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இதில் R – ன் மதிப்பி எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை நாம் கட்டுக்குள் வைக்க முடியும். அப்போதுதான் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பற்றிய சரியான முடிவை எடுக்க முடியும்.

இறுதியாக: நாம் தயாராகும் நேரத்தை பெற வேண்டும்.

கொரோனா வைரஸ் இன்னும் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. 152 நாடுகளில் புதிய எண்ணிக்கை இன்னும் பதிவாகிக் கொண்டே உள்ளது. நாம் எப்பொழுதும் நேரத்திற்கு  எதிரானவர்கள். ஆனால் நாம் அவ்வாறு இருக்கத் தேவையில்லை: இதைப் பற்றி நாம் சிந்திக்க ஒரு தெளிவான வழி இருக்கிறது.

சில நாடுகள், குறிப்பாக கொரோனா வைரஸால் இன்னும் அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் ஆச்சரியப்படலாம்: இது நமக்கும்  நடக்குமா? இதற்கான பதில்: வைரஸ் ஏற்கனவே உங்கள் நாட்டில் நுழைந்து விட்டது. நீங்கள் இன்னும் கவனிக்கவில்லை என்பதே ஆகும். வைரஸின் தாக்கம் உங்களுக்கு தெரிய வரும்போது உங்களின் சுகாதரக் கட்டமைப்புகள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகலாம். பின்னர் வருத்தப்படுவதைக் காட்டிலும் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவது நன்று.

கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் நாடுகளுக்கான வாய்ப்புகள் தெளிவாக உள்ளன.

ஒன்று, தணிக்கை – பெரும் அளவில் நோயை பரவ அனுமதித்து, சுகாதார அமைப்பை மூழ்கடித்து, மில்லியன் கணக்கான மக்களின் மரணத்தை தூண்டுகின்றன. மேலும், புதிய மியூட்டேசன் ஏற்பட்ட வைரஸ் வகைகளை பரவ விடுகின்றன.

மற்றொன்று, போராடுதல் – தயாராகத் தேவையான நேரத்தை பெறவும், உரிய செயல் திட்டத்தை உருவாக்கவும், தடுப்பூசி வரும் வரை இந்த வைரஸைக் கட்டுப்படுத்தவும் சில வாரங்களுக்கு மக்களை வீடுகளுக்குள் முடக்கலாம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து அல்லது நெதர்லாந்து போன்ற சில நாடுகளை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள அரசுகள் இதுவரை தணிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளன.

அதாவது அவர்கள் போராட விரும்பவில்லை. மற்ற நாடுகள் வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதை அவர்கள் கண்டாலும், அவர்கள் கூறுவது “எங்களால் அதைச் செய்ய முடியாது!”.

அதையே, சர்ச்சில் சொல்லியிருந்தால்? “நாஜிக்கள் ஏற்கனவே ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் உள்ளனர். நாங்கள் அவர்களுடன் போராட முடியாது. விட்டுவிடுவோம்.” துரதிஷ்டவசமாக உலகெங்கிலும் உள்ள பல அரசாங்கங்கள் இதைத்தான் செய்கின்றன. இதை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பை அவர்கள் உங்களுக்கு வழங்கவில்லை. நீங்கள் தான் அதை கோர வேண்டும்.

பகிரவும்

துரதிர்ஷ்டவசமாக, மில்லியன் கணக்கான உயிர்கள் இன்னும் ஆபத்தில் உள்ளன. மக்களின் கருத்தை மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால் இந்த கட்டுரையை அல்லது இதே போன்ற ஒன்றைப் பகிரவும். ஒரு பேரழிவைத் தவிர்க்க தலைவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது செயல்பட வேண்டிய தருணம்!!!!

 

மூல ஆங்கிலக் கட்டுரை: டோமஸ் புயோ

தமிழில்: லயா