மனிதத் தோலில் 9 மணிநேரங்கள் உயிர்வாழும் கொரோனா வைரஸ்!

டோக்கியோ: கொரோனா வைரஸ் மனித தோலில் 9 மணிநேரங்கள் வரை உயிர்வாழ்வதாக ஜப்பான் ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே, கைகளை அடிக்கடி கழுவுதல் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

மனிதனின் ஃப்ளூவை உண்டாக்கும் கிருமி, நமது தோலில் 1.8 மணிநேரமே உயிர்வாழ்கிறது. எனவே, அதனுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் வாழும் நேரம் ஆச்சர்யமூட்டுவதாய் இருக்கிறது.

கொரோனாவால் இறந்தவர்களின் தோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், கோவிட்-19 வைரஸும், ஃப்ளூ வைரஸும் எத்தனாலால் சுத்தம் செய்த 15 வினாடிகளில் மரணித்து விடுகின்றன.

இந்த எத்தனால்தான் சானிடைசர்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.