கொரோனா வைரஸ் : சென்னை மெட்ரோ ரெயில் இயங்கும் நேரம் குறைப்பு

சென்னை

கொரோனா அச்சுறுத்தலால் சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரங்கள் குறைக்கப்படுகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை அனைவரையும் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.  அரசு அலுவலகங்கள் முக்கிய பணிகளுக்காக  மிகக் குறைந்த ஊழியர்களுடன் இயங்க உள்ளது.   பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன.

சென்னை மெட்ரோ ரெயில் வரும் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேடி வரை அவசரப் பணிகளுக்குச் செல்வோருக்காகக் காலை ஆறு மணி முதல் 8 மணி வரையும் அலுவலக முக்கியப் பணிகளுக்குச் செல்வோருக்காகக் காலை 8 மணி முதல் 10 மணி வரை இயங்க உள்ளது.

அலுவலகத்திலிருந்து திரும்புவோருக்காக  இதைப் போல் மாலை 4 மணி முதல் 8 மணி வரை இயங்க உள்ளது.  இதற்கு இடையில் மெட்ரோ ரெயில்கள் முழுவதுமாக இயக்கப்பட மாட்டாது.