கொரோனா வைரஸ்: சீனாவைத் தொடர்ந்து ஈரான், இத்தாலி, தென் கொரியாவிலும் பலி எண்ணிக்கை உயர்வு….

வுகான்:

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் (கொவைட்-19) சீனாவை மட்டுமல்லாது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பில் சிக்கி உள்ள ஈரான், இத்தாலி, தென் கொரியாவில் நாளுக்கு உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை  2,715 ஆக  உயா்ந்துள்ளது.  78,064-க்கும் அதிகமானோர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகவும் சீன சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஈரான், இத்தாலி, தென் கொரியா போன்ற நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்சி தவித்து வருகிறது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000ஆக உயர்ந்துள்ளது, அதே வேளையில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 10ஆக உயர்நது உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தாலியில்  தற்போது வரை 322 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் இருந்து அல்கேரியா சென்றவருக்கு தற்போது கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்திலும் 70 வயது முதியவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானிலும் 95 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர், 15 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,000ஆக அதிகமாக அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி