உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால், டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழப்பு

டெல்லி:

கொரோனா அச்சுறுத்தல்காரணமாக டெல்லி தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளி உயிரிழந்தார். அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு, மருந்து சரியான முறையில் வழங்கப்படாததால் அவர் உயிரிழந்ததாக, அந்த மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மற்ற நபர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அதில் கலந்துகொண்ட வர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்று அங்கே தங்கியிருந்த  தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் வசிக்கும் மொகமது முஸ்தபா (வயது 50)  என்பவருக்கும் கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், மேற்கு டெல்லி சுல்தான்புரியில்  உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டார். அவரது சோதனை முடிவு இன்னும் வரவில்லை.

இதற்கிடையில், அங்கிருந்த முஸ்தபா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு சரியான முறையில் மருந்து, உணவு கொடுக்கப்படாததால்தான் அவர் இறந்தார் என்று அங்கி தங்கியிருக்கும் மற்ற நோயாளிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து அங்குள்ள மற்றொரு நோயாளியான இனாயத்துல்லா என்பவர், “முஸ்தபா நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனக்கு சரியான நேரத்தில்  மருந்து மற்றும் சரியான நேரத்தில் உணவுகளை வழங்கும்படி  கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், அவரது பேச்சை யாரும் கேட்க விரும்பவில்லை.  அவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

தங்களுக்கு தேவையான உணவுகள் எடுத்து வர “எங்கள் டெல்லி தொழிலாளர்கள் எம்.பி.க்களிட மிருந்து கடிதங்களைப் பெற்றனர், ஆனாலும்,  அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாயிலில் இருந்த போலீசார் உணவை தூக்கி எறிந்து தொண்டர்களை விரட்டியடித்தனர்.

எங்களுக்கு யாரையும் உதவ அனுமதிக்க மறுக்கின்றனர்.  நாங்கள் சாக வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர்,  சுல்தான்புரி தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், காலை 11.30 மணிக்கு மட்டுமே காலை உணவு வருகிறது, அது ரொட்டி மற்றும் வாழைப்பழத்தின் இரண்டு துண்டுகள்.  மதிய உணவு  மதியம் 2.30 மணிக்குப் பிறகு மதிய உணவு வருகிறது  ஒரு காய்கறி கறியுடன் இரண்டு ரோட்டிகள் மற்றும் இரவு உணவு வழக்கமாக பருப்புடன் 2 ரோட்டிகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

இரா சாப்பிட்டுக்கொண்டு, நீரிழிவு நோயாளி எவ்வாறு உயிர்வாழ முடியும்? நீரிழிவு நோயாளி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை சாப்பிட வேண்டும். எங்களுக்கு காலையில் தேநீர் கிடைக்காது, ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது சாக்லேட் வாங்க நாங்கள் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.  எங்களிடம் பணம் உள்ளது, ஆனால் காவல்துறையினர் எங்களை அனுமதிப்பது இல்லை. அவர்களும் எங்களுக்கு உதவ மாட்டார்கள் என்று வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.