கொரோனா டோன்ட் கேர்.. ’இந்தியன்’ பட நடிகை பரபரப்பு..

கொரோனாவுக்கு உலக நாடுகளே நடுங்கிக்கொண்டிருக்கும்போது பிரபல நடிகை கொரோனா கண்டு எனக்கு பயம் இல்லை என்று குறிப்பிட்டிருக் கிறார். அவர் அப்படி சொன்னது ஏன் என்பதற்கு அவரே விளக்கமும் அளித் திருக்கிறார்.


இந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடி யாக நடித்த மனிஷா கொய்ராலா மீண்டும் கமல் ஜோடியாக மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான் படங்களிலும் நடித்தார். பாபா படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும், முதல்வன் படத்தில் அர்ஜூன் ஜோடியாகவும் நடித்தார். கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி மனீஷா பேட்டி அளித்தார்.
அவர் கூறும்போது,’கொரோனா வைரஸ் தொற்று பற்றி எனக்கு பயம் கிடையாது. இதைவிட வேதனைகளை என் வாழ்வில் அனுபவித்துவிட்டேன். தற்போது தெளிவான சூழலில் என் வாழ்க்கையை நடத்து வருகிறது. தியானம், யோகா பயிற்சிகள் செய்கி றேன். இது எப்போதும் இல்லாத அளவுக்கு என்னை நிம்மதியாகவும், அமைதியாகவும் வைத்திருக்கிறது. மும்பையில் பறவைகளின் சத்தம் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்போது தான் கேட்கிறது. எனது வாழ்க்கையை இயற்கையோடு கழிக்கிறேன். பெற் றோருடன் நேரத்தை செல்விடுகிறேன் முன் எப்போதும் இல்லாத சந்தோஷத் துடன் நான் இருக்கிறேன்’ என தெரிவித் திருக்கிறார்
நடிகை மனீஷா சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். ஒரு வருட சிகிச்சையின்போது அவர் கீமோ தெரபி எடுத்துக்கொண்டதுடன் ஆபரேஷனும் செய்துகொண்டர். அதைத்தான் அவர் வாழ்க்கையில் பெரிய வலிகளை அனுபவித்து விட் டேன், கொரோனா வைரஸைவிட அது கொடுமையானது என குறிப்பிட்டி ருக்கிறார்.