கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா பாதிப்பு…

 கிருஷ்ணகிரி:  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இவர் கடந்த மார்ச் 21-ம் தேதி மைசூர் சென்றுவந்தவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 34 நாட்கள் தனிமையில் இருந்த அவருக்கு தற்போது கொரோனா கண்டறியப்பட்டது. இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உறுதி செய்துள்ளார். மேலும், மேல்பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் அவர் தொடர்பு சார்ந்தவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.