கொரோனா எதிரொலி: இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விமான சேவைகளை ரத்து செய்தது கத்தார்….

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தார் அரசு, பல விமான சேவைகளை  ரத்து செய்து அறிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது ஊர்ஜிதம் செய்யப்பட்டு உள்ளது. இதை தடுக்க உலக சுகாதார நிறுவனமும் கடுமையான முயற்சி எடுத்து வருகிறது. வைரஸ் பரவுதல் காரணமாக பல நாடுகள் விசா, விமான சேவை உள்பட பல சேவைகளை ரத்து செய்து அறிவித்து உள்ளன.  மேலும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், கத்தார் நாடு இந்தியா, சீனா, பங்களாதேஷ் உள்பட 14 நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்து அறிவித்து உள்ளது. அத்துடன் பணி விசா, இருப்பிட விசா வைத்திக்கும் வெளிநாட்டவர்கள்   நாட்டிற்குள் நுழையவும் தடை விதித்துள்ளது.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மக்களிடையே விமான சேவையைப் பயன்படுத்துவதில்  அச்சம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.