டில்லி

மிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களின் தொண்டைகளில் கொரோனா வைரஸ் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் வவ்வால்கள் மூலமாக கொரோனா பரவியதாக முன்பு ஒரு தகவல் வெளியானது.  சீன மக்கள் அந்த வவ்வால்களை உண்டதால் கொரோனா தொற்று அதிகரித்ததாகவும் அப்போது கூறப்பட்டது.   அத்துடன் அமெரிக்க உயிர் காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இழந்தது.   இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு பல விலங்குகளை சோதித்து வருகின்றது.

அவ்வாறு நடந்த சோதனையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு பல மாநிலங்களில் உள்ள வவ்வால்களின் தொண்டையில் இருந்து  எடுக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்தது.  இதில் தமிழகம், கேரளா, இமாசலப்பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட 4 மாநில வவ்வால்களின் தொண்டையில் கொரோனா உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்நாடகா, அரியானா, குஜராத், ஒரிசா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களின் வவ்வால்களின் மாதிரிகளில் கொரோனா வைரஸ் உள்ள்து உறுதி ஆகவில்லை.   இந்த தகவல்களை நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு அறிவித்துள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள், ”வவ்வால்கள் தங்களுக்குள் பரந்த அளவில் கொரோனா வைரஸ்களை வளர்த்துக் கொள்ளும்.  வவ்வால்கள் பாலூட்டிப் பறவைகள் ஆகும். எனவே அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகள் மூலமோ கொரோனா வைரஸை பரப்ப வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.