பாரீஸ்: பிரான்சில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது. பாதிப்பு குறைவு என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது.

இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 24 மணி நேரத்தில் 8,975 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இது தான்.

முதலில் 4.2 சதவீதம் என்று இருந்த கொரோனா இப்போது 4.5 சதவீதத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 30,686 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 18 பேர் 24 மணிநேரத்தில் பலியாகி உள்ளனர் என்று தெரிவித்தனர்.

தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் முடக்கத்தை படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.