டெல்லி:

ந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

சீனாவில் இருந்து வேகமாக பரவும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவி வருகிறது. சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த நிலையில், ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  அவர்கள் நோய் குணமாகி வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில், தற்போது 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

துபாயில் இருந்து இந்தியா திரும்பிய தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இத்தாலியில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கு விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

அதன்படி, டெல்லியில் ஒருவரும், தெலுங்கானா மாநிலத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகள் இருவரும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.