கொரானா வைரஸால் சூழப்பட்டது சென்னை: மணலி பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா…

சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல்  அம்பத்தூர், மணலி மண்டலங்கள் இருந்தது வந்தது.  ஆனால், யார் கண் பட்டதோ,  அந்த பகுதி களிலும் கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதுதுமே கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உளளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் மண்டலத்தில் ஒருவருக்கு கொரோனா கண்டறியப் பட்ட நிலையில், இன்று மணலி மண்டலத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை முழுவதும் கொரோனோ பரவி வருவது உறுதியாகி உள்ளது இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 20ந்தேதி வரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அம்பத்தூர் மற்றும் மணலி மண்டலங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாத நிலை இருந்தது வந்தது. ஆனால், 21ந்தேதி அம்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்ட நிலையில், இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்த மணலி பகுதியிலும் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதன் காரணமாக சென்னை முழுவதும் கொரோனா வைரஸால் சூழப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சி நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  21ந்தேதி அன்று 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  நேற்று கூடுதலாக 15 பேர் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, 373 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது மணலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி