டெல்லி: கொரோனா வைரஸ் தொற்று, டெல்லியில் சமூக பரவலாக இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது இதை கூறியுள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: டெல்லி சமூக பரவல்  இல்லை என்பதால் பயப்படத் தேவையில்லை.

நான் டாக்டர் பால் (அரசாங்க சிந்தனைக் குழுவிலிருந்து நிதி ஆயோக்), டாக்டர் பார்கவா (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் மற்றும் டாக்டர் குலேரியா (இயக்குனர், எய்ம்ஸ்) ஆகியோருடன் பேசினேன். இன்னும் அந்த நிலைமை வரவில்லை.

அதிகளவாக கொரோனா சோதனை செய்யப்பட்டதால் இதுபோன்று தோற்றம் உருவாகி உள்ளது. இப்போது நாங்கள் சராசரியாக 20,000 சோதனைகளை செய்யத் தொடங்கினோம். எனவே பயப்படத் தேவையில்லை என்றார்.

முன்னதாக, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், டெல்லி சமூகத்தில் பரவும் ஒரு கட்டத்தில் இருப்பதாக கூறி இருந்தார். ஜூன் 12ம் தேதி கொரோனா சமூக பரவல் கட்டத்தில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.