சென்னையில் கொரோனா உக்கிரம்: 16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவிஆய்வாளர் உள்பட 22 பேர் பலி…

சென்னை:

சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. கடந்த  16 மணி நேரத்திற்குள் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்பட இன்று 22 பேர் பலியாகி உள்ளனர்.  நேற்று மாலை 6 மணி முதல்  முதல் இன்று காலை 10 மணி வரையிலான 16 மணி நேரத்தில்  22 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று  ஒரே நாளில் 1,956 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  49, 690 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் பலி எண்ணிக்கையும்  730 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று 22 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த  சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவல்ர, அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்த 82 வயது மூதாட்டி, கொருக்குப்பேட்டையை சேர்ந்த 68 வயது மூதாட்டி, கொடுங்கையூரை சேர்ந்த 86 வயது மூதாட்டி உட்படட 6 பேர் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் ராமாபுரத்தை சேர்ந்த 73 வயது முதியவர், திருவல்லிகேணியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த 58 வயது ஆண் ஒருவரும், அண்ணாநகரை சேர்ந்த 82 வயது முதியவர்,   ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள் பட 6 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சிந்தாகிரிபேட்டையை சேர்ந்த மூதாட்டி ஒருவர், நங்கநல்லூரை சேர்ந்த மூதாட்டி ஒருவர், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முதியவர் ஒருவர், ஐயப்பாக்கத்தை சேர்ந்த 42 வயது நபர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் நேற்று இரவு 9 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.