குவான்ஸு: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள குவான்ஸுவில், கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து சரிந்ததில், மொத்தம் 70 பேர் வரை இடிபாடுகளில் சிக்கிகொண்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தென்கிழக்கு புஜியன் மாகாணத்திலுள்ள குவான்ஸு என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட கூடியவர்களை ஆய்வு செய்வதற்காக ஒரு ஹோட்டல் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால், இந்த ஹோட்டல் இன்று திடீரென இடிந்தது. இதனால், அதனுள் இருந்த 70 பேரும் சிக்கிக்கொண்டனர். எனவே, இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சின்ஜியா எக்ஸ்பிரஸ் என்ற பெயர் கொண்ட இந்த ஹோட்டல், 5 மாடி கட்டடமாகும். இதுவரை 23 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரச்சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை.

இது தானாக நடந்த விபத்தா? அல்லது வேறு காரணங்கள் இருக்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.