தமிழகத்தில் ஜெட் வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று… இன்று 1927 பேர் பாதிப்பு…

 சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறதுஇன்று ஒரே நாளில்  1,927 பேர் புதியதாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 36,841ஆக அதிகரித்துள்ளது

தமிழகத்தில், குறிப்பாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 2ஆயிரத்தை தொடும் அளவுக்கு பாதிப்பு உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 24 மணி நேரத்தில் “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட தமிழகத்தில் 1,927 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  மொத்த பாதிப்பு 36,841ஆக அதிகரித்துள்ளது

இன்று ஒரே நாளில் 17,675பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,38,846ஆக அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,162பேர் ஆண்கள், 765பேர் பெண்கள். 77 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 19பேர் உயிரிழந்தனர்.

7பேர் தனியார் மருத்துவமனையிலும், 12பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 326ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,008பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,333 ஆக அதிகரித்துள்ளது.