சான்டியாகோ: அமெரிக்காவில்  உயிரியல் பூங்காவில் ஏராளமான கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சான்டியகோ உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன் கூறி இருப்பதாவது: இதுவரை 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில குரங்குகளும் தொடர்ந்து இருமி கொண்டே இருக்கின்றன என்றார்.

இந்த உயிரியல் பூங்காவுக்குள் டிசம்பர் 6ம் தேதி முதல் பொதுமக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து கொரில்லா குரங்குகளை கண்காணித்து வருகின்றனர்.

வழக்கமான உணவுகளுடன் சத்து மாத்திரைகள் மட்டும் கொரில்லாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சளி, இருமல் தவிர இந்த கொரில்லா குரங்குகளுக்கு வேறு எந்த உடல் நல கோளாறும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.