ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா அதிவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான்கெர்கோவ் கூறியதாவது:

இப்போது தொற்று நோயின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றார். உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.