பீஜிங்: ‘பயோ வார்’ மூலம் உலக நாடுகளை மிரட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா திட்டமிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதாக கூறப்படும் நிலையில், தற்போது சீனா பயோ வார் எனப்படும் உயிரிக்கொல்லியை ஆதயமாக்க கடந்த 2015ம் ஆண்டே திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில்  சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஓராண்டை கடந்தும், தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி . கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என அமெரிக்க முன்ன்பள் அதிபர் டிரம்ப் உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது.  சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பும், சீனாவில் இருந்து கொரோனா பரவவில்லை என்று கூறியது.

ஆனால், கொரோனா வைரஸை உருவாக்கியது என சில சீன விஞ்ஞானிகள் கூறினர். ஆனால், அவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்தனர். சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கன்றன.

சமீபத்தில், சீனாவின் வுகானில் பணியாற்றிய ஜப்பானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற பிரபல சீன விஞ்ஞானி டசுக்கு ஹோஞ்சோ (Tasuku Honjo), கொரோனா வைரஸ்  சீனாவில் உருவாக்கப்பட்டதுதான், இது இயற்கையானது அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இவர் கடந்த  2018ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். இவர் தனது கருத்து தவறு என்றால்,  தனது நோபல் பரிசை எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் சவால் விட்டுள்ளார். மேலும், இந்த வைரஸ் மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதால்தான்  இடம், காலச்சூழலுக்கு தகுந்தவாறு தன்னை உருமாற்றிக்கொண்டு,  உலக மக்களை சூறையாடி வருகிறது என்றும் கூறியிருந்தார். அவரது கூற்று உண்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது THE AUSTRALIAN என்ற பத்திரிகை புதிய தகவலை வெளியிட்டு உள்ளது.

அதில், கொரோனா வைரஸை ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து சீனா, கடந்த 2015-ஆம் ஆண்டிலேயே சிந்தித்து வந்ததாகவும், இதுதொடர்பாக  சீன ராணுவ விஞ்ஞானிகளும் அந்நாட்டு சுகாதாரத்துறையினரும் விவாதித்தனர் என்று கூறியதுடன், 3-ஆவது உலகப்போர் உயிரியல் ஆயுதங்களால் நிகழக்கூடும் என்றும், இதன்மூலம் எதிரி நாட்டின் மருத்துவத்துறையை செயலிழக்க செய்துவிட முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் விவாதித்ததாக ஆஸ்திரேலிய பத்திரிகை தெரிவிக்கின்றது. அதற்கான ஆவணங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இதுவரை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வரும் நிலையில், சீனா மட்டும் தொற்று பாதிப்பு இன்றி ஹாயாக இருந்து வருகிறது.

உலக நாடுகளின் விஞ்ஞானிகள் 3வது உலகப்போரானது பயோ வாராக இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ள நிலையில், ஜப்பானிய விஞ்ஞானி மற்றும் ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வரும்  நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதுடன், சீனா மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது.