ஸ்ரேல்

கொரோனா வைரஸ் தொற்று வெகு விரைவில் முடிவுக்கு வரும் என நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலக மக்களைக் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.  சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய இந்த தொற்று சுமார் 175க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.   சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது.    இதை அடியோடு ஒழிக்க  உலக நாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன.

இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் கொரோனா தொற்று குறித்து  கடந்த ஜனவரி மாதம் முதல் ஆராய்ச்சி செய்து வருகிறார்.  அவர் சீனாவுக்கு இணையாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார்

இவர் சென்ற மாதம் சீனாவில் 80000 பேர் பாதிக்கப்பட்டு 3250 பேர் மரணம் அடைவார்கள் எனச் சொன்னது ஏறத்தாழ உண்மையாகி உள்ளது.  சென்ற மாதம் வரை சீனாவில் கொரோனாவால் 80,298 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3245 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஊடகங்கள் வெளியிடும் கொரோனா மரணம் மற்றும் பிரபலங்களுக்கு கொரோனா தாக்குதல் போன்ற செய்திகளால் மக்கள் பீதி அடைவதாக் கூறி உள்ளார்.

கொரோனாவால்  இறந்தவர்களில் 75% பேர்65 வயதுக்கு மேற்பட்டோர் எனவும் இத்தாலியில் அதிக அளவில் முதியவர்கள் உள்ளதால் அங்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்ற மாதத்தை விட கொரோனாவால் பலி ஆனோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்துள்ள லெவிட் விரைவில் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என அறிவித்துள்ளார்