சங்கு ஊதினால் கொரோனா பாதிப்பு ஏற்படாது எனக் கூறிய பாஜக எம்பிக்கு கொரோனா

டில்லி

ங்கு ஊதுவதால் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ள பாஜக எம்பி சுக்பீர் ஜவுனபுரியா என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் பல பாஜக பிரபலங்கள் கொரோனா குறித்து தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் தெரிவித்து வருகின்றனர்.  அவற்றில் பல கருத்துக்கள் மிகவும் அபத்தமானதாக உள்ளன என மக்கள் குறை கூறி வருகின்றனர்.

ஆயினும் பாஜகவினர் இத்தகைய கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்துவதில்லை,

பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுக்பீர் ஜவ்குனபுரியா என்பவர் கொரோனா குறித்த புதிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.   அந்த வீடியோ டிவிட்டரில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் அவர் உடலெங்கும் மண்ணை பூசியபடி கையில் ஒரு சங்குடன் தோன்றுகிறார்.

அவர், “நான் சங்கு ஊதுவதை வழக்கமாக கொண்டுள்ளதால் எனது நுரையீரல் கொள்ளளவு அதிகரித்துள்ளது,.  எனவே என்னை கொரோனா தொடவும் செய்யாது.  மண் குளியல் செய்வதால் எனது எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்” என கூறுகிறார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.