டில்லி

லகில் உள்ள 185 நாடுகளில் பரவி உள்ள கொரோன வைரஸ் இதுவரை 16503 பேரைப் பலி வாங்கி உள்ளது.

சீனாவில் வுகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைர்ஸ் தற்போது உலகெங்கும் சுமார் 185க்கும் அதிகமான நாடுகளில் பரவி உள்ளது.  உலகெங்கும் சுமார் 3,78,829 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   இவர்களில் 16,503 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது உலக நாடுகளில் சீனாவை விட் இத்தாலி நாட்டில் பாதிப்பு அதிகமுள்ளது நேற்று மட்டும் இத்தாலியில் ஒரே நாளில் 651 பேர் உயிரிழந்துள்ளனர்.   புதியதாக 5560 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  தற்போது இத்தாலியில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 63927 ஆகி உள்ளது.

நேற்றைய கணக்குப்படி சீனாவில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 3277 ஆகும்.  மொத்தம் சீனாவில் 81171 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நேற்று வரை ஸ்பெயின் நாட்டில் கொரொனாவுக்கு2311 பேர் பலி ஆகி உள்ளனர்.  நேற்று இங்கு 3272 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 35136 ஆகி உள்ளது.

ஈரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23049 ஆகவும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 1812 ஆகவும் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் 552 பேர் மரணமடைந்து 43721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். 476 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இதில் தமிழகத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் பலி எண்ணிக்கை 860 ஆக உயர்ந்து  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 19, 856 ஆக உயர்ந்துள்ளது.

ஜெர்மனியில் 123 பேர் உயிரிழந்து 29,056 பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் 335 பேர் உயிரிழந்து 6,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 7 பேர் உயிரிழந்து 1,887 பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்ஜியத்தில் 88 பேர் உயிரிழந்து 3,743 பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் 14 பேர் உயிரிழந்து 1,518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் 42 பலியாகி 1,1128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 6 பேர் பலியாகி. 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் 2 பேர் பலியாகி 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவூதியில் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளன போதிலும் இங்கு யாரும் பலியாகவில்லை.