திருவனந்தபுரம்

நேற்று கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 36 பேர் குணம் அடைந்து  2 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா

கடந்த ஜனவரி மாத இறுதியில் கேரள மாநிலத்தில் இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.   அதன் பிறகு அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது.  இதனால் கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன.  தனிமைப்படுத்துதல், சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன.

ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளால் பலர் வாழ்வாதாரம் பதிக்கப்பட்டதால் அவர்களுக்காகக் கேரள மாநிலத்தில் 18691 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.  அங்கு 3,36,436 பேர் தங்க வைக்கப்பட்டு  உணவு, உறைவிடம் அளிக்கப்படுகிறது.  மேலும் ஊரடங்கை மீறுவோர் மீது உடனடியாக வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

இந்த நடவடிக்கைகளால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது.  அம்மாநில சுகாதார அமைச்சர் ஷைலஜா, “நேற்று கொரோன பாதிப்புக்குள்ளானவர்களில் 36 பேர் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.  மற்றும் நேற்று இருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று ஒரே நாளில் கேரள மாநிலத்தில் அதிக அளவில் 36 பேர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  இது வரை அதிக அளவில் ஒரே நாளில்28 பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர்.  இதன் மூலம் கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் குறைந்து வருவது தெரிய வருவ்தாகவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று பாதிக்கப்பட்ட இருவரும பட்டனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்கள் இருவரும் வெளிநாடு சென்று வந்தவ்ரக்ள் ஆவார்கள்,  இத்துடன் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 194 ஆகி உள்ளது.  இவர்களில் காசரகோட் மாவட்டத்தில் 97 பேரும் கண்ணூர் மாவட்டத்தில் 42 பேரும் உள்ளனர்.