கொரோனா எதிரோலி: புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

புதுச்சேரி:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி நமது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் இன்று முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.