டெல்லி:

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்து வர 14 விமான நிறுவனங்ககள் முன் வந்துள்ளன. இந்த பணிக்காக 34 மீட்பு விமானங்களை இந்த விமான நிறுவனங்கள் இயக்கியுள்ளன என்று டிஜிசிஏ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு பணிகளுக்காக மலேசிய விமான நிறுவனமான ஏர் ஏசியா விமான நிறுவனம், அதிகளவிலான விமானங்களை இயக்கியுள்லது. அதாவது, ஏழு விமானங்களை இயக்கியுள்ளது. இந்த விமானங்கள் கோலாலம்பூரில் இருந்து இந்தியா வரை இயக்கப்பட்டது. இதுமட்டுமின்றி மலேசியாவில் இருந்து திருச்சி, விசாகப்பட்டினம் மற்றும் திருச்சிக்கும் மார்ச் 18 மற்றும் 24-ஆம் தேதிகளில் விமானங்களை இயக்கியுள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கூடுதலாக மூன்று விமானங்களை ஜப்பானில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்காக டெல்லியில் இருந்து இயக்கியது.

மார்ச் மாத தொடக்கத்தில் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததிலிருந்து, அதன் இரண்டு விமான நிறுவனங்களான மஹான் ஏர் மற்றும் ஈரான் ஏர் ஆகியவை ஐந்து மீட்பு விமானங்களை இயக்கியுள்ளன, இந்தியர்கள் தெஹ்ரானில் இருந்து திரும்பவும், தங்கள் குடிமக்கள் மற்றும் சரக்குகளை புதுதில்லியில் இருந்து வெளியேற்றவும் அனுமதிக்கின்றன.

ஐரோப்பிய விமான நிறுவனங்கள், லுஃப்தான்சா, ஏரோஃப்ளோட், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், கே.எல்.எம் ராயல் டச்சு ஏர்லைன்ஸ், லாட் போலிஷ் போன்றவை இந்தியாவுக்கு மொத்தம் ஏழு விமானங்களை இயக்கியுள்ளன.

இந்த வார தொடக்கத்தில் ஜேர்மன் நாட்டினரை வெளியேற்றுவதற்காக லுஃப்தான்சா தனது ஏ 380 விமானத்தை பிராங்பேர்ட்டில் இருந்து டெல்லிக்கு அனுப்பியது. உலகெங்கிலும் உள்ள லுஃப்தான்சா குழும விமான நிறுவனங்கள் (சுவிஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா மற்றும் யூரோவிங்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய) இயக்கப்பட்டன. மொத்தம் 220 சிறப்பு விமானங்களில் இந்த விமானம் ஒன்றாகும் என்று ஒரு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.