Random image

சென்னை வந்த சீன சரக்கு கப்பலில் 2 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை:

சீனாவிலிருந்து சென்னை துறைமுகம் வந்த சரக்கு கப்பலில் பூனை ஒன்று வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வந்துள்ள சரக்கு கப்பலில் உள்ள மாலுமிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கப்பலில் இருந்து பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபட ஊழியர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கி வருகிறது.  இந்த நிலையில் மேக்னேட் என்ற கப்பல் சீனாவில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் வந்தது.

அந்த கப்பலில்,  10 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் உள்ளது இந்த கப்பலில் உள்ள ஊழியர்கள் உள்பட யாரையும் கீழே இறங்க அனுமதி மறுத்த அரசு, கப்பலில்  மாலுமிகள் உள்பட 19  ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.

இந்த சோதனையில்  மாலுமிகள் இருவருக்கு கொரானா வைரஸ் அறிகுறி தென்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரது ரத்த மாதிரிகளும், அடுத்தகட்ட பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கப்பலில் இருந்து சரக்கை இறக்கும் பணியை மேற்கொள்ள   ஊழியர்கள் அச்சமடைவதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சீன கப்பலில் இருந்து பொருட்களை இறக்குவதும் தடைப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை சென்னை போர்ட் டிரஸ்ட்  வெளியிட்டு உள்ளது.