டிஜிபி அலுவலகத்தில் ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா

சென்னை:
சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 உளவுத்துறை காவலர்கள் உள்பட 4 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.