சென்னை:
மிழகத்தில் தீவிரமாகி வரும் கொரோனா தொற்று, செய்தியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே 27 ஊடகத்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தீவிரமாகி உள்ளது.  ஷாகின்பாத் போராட்டம் நடத்திய ராயபுரத்தில் மட்டும் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் சத்யம் டிவி, பாலிமர் டிவி சேனலில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட சேனலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் (95 பேருக்கும்) கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் சத்தியம் டிவியில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்கள் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனனர்.  அந்த சேனல் மூடப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் தொடர்பு தடமறிதல் முறை மூலம் உடனடியாக தீவிரமாக தேடி தனிமைப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 6 பேர் பாலிமர் டிவி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.